குடும்ப நீதிமன்றத்தின் முன்னால் நெடுநேரமாக காத்திருந்த தந்தை மகளின் ஒரு நிமிட பார்வைக்காக பரிதவிப்பு இந்தியாவில் ஒரு குடும்ப நீதிமன்றத்தின் வெளியே காத்திருந்த தந்தையின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.குறித்த காணொளியில், தந்தை தனது மகளை, தாயார் மற்றும் உறவினர்கள் அழைத்துச் செல்லும் போது பார்க்க முயற்சிக்கும் காட்சி பதிவாகியுள்ளது.மகளை ஒரு நிமிடம் பார்பதற்காக காத்திருக்கும் காட்சிகள் மனதை நெருடச் செய்கின்றது.தந்தை மகளின் பிரிவின் பரிதவிப்பு இணையத்தில் அனைவரின் கவனத்தினையும் பெற்றுள்ளது.பெற்றோரின் பிரிவினால் உறவுகளில் ஏற்படும் சிக்கல் காணொளியில் வெளிப்படுகின்றது.இச்சம்பவம் பெற்றோரின் சம உரிமைகள், குழந்தை பராமரிப்பு உரிமைகள் குறித்து கவலை எழுப்பியுள்ளது.குறித்த காணொளியை அனைவரும் தமது கருத்துகளை தெரிவித்து பகிர்ந்து வருகின்றனர்.https://www.facebook.com/share/v/1ARNG5Vu6U/