• Sep 20 2024

கடும் குளிரால் 10க்கு மேற்பட்ட கால்நடைகள் உயிரிழப்பு!

Tamil nila / Dec 9th 2022, 11:07 am
image

Advertisement

கடும் குளிரால் 10க்கு மேற்பட்ட கால்நடைகள் பலியாகியதுடன், ஏனையவற்றின் உயிரை பாதுகாக்க பண்ணையாளர் போராடி வருகின்றார்.

மாவட்டத்தில் கடும் குளிருடன் மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், பொருளாதார தாக்கமும் ஏற்பட்டுள்ளது.


கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பொன்னகர் பகுதியில் சிவராசா சிவகாந்தன் என்பவரது பண்ணையில் இருந்த கால்நடைகளே இவ்வாறு உயிரிழந்தும், உயிருக்காக போராடியும் வருகிறது.


இந்த நிலையில், அவற்றை மீட்டு, தீ மூட்டி உயிரை பாதுகாக்கும் செயற்பாட்டில் பண்ணையாளரும், அயலவர்களும் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் குறித்த பண்ணையாளருக்கு பல லட்சம் நட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பு தொடர்பில் கிராம சேவையாளர் ஊடக மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவிற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக பண்ணையாளர் தெரிவித்துள்ளார்.


மாவட்டத்தில் இடம் பெற்ற பாதிப்புக்கள் தொடர்பில் மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு தகவல்களை திரட்டி வருகின்றது.

கடும் குளிரால் 10க்கு மேற்பட்ட கால்நடைகள் உயிரிழப்பு கடும் குளிரால் 10க்கு மேற்பட்ட கால்நடைகள் பலியாகியதுடன், ஏனையவற்றின் உயிரை பாதுகாக்க பண்ணையாளர் போராடி வருகின்றார்.மாவட்டத்தில் கடும் குளிருடன் மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், பொருளாதார தாக்கமும் ஏற்பட்டுள்ளது.கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பொன்னகர் பகுதியில் சிவராசா சிவகாந்தன் என்பவரது பண்ணையில் இருந்த கால்நடைகளே இவ்வாறு உயிரிழந்தும், உயிருக்காக போராடியும் வருகிறது.இந்த நிலையில், அவற்றை மீட்டு, தீ மூட்டி உயிரை பாதுகாக்கும் செயற்பாட்டில் பண்ணையாளரும், அயலவர்களும் ஈடுபட்டுள்ளனர்.இதனால் குறித்த பண்ணையாளருக்கு பல லட்சம் நட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பு தொடர்பில் கிராம சேவையாளர் ஊடக மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவிற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக பண்ணையாளர் தெரிவித்துள்ளார்.மாவட்டத்தில் இடம் பெற்ற பாதிப்புக்கள் தொடர்பில் மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு தகவல்களை திரட்டி வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement