• Feb 05 2025

பாரிய நெருக்கடியில் சுகாதாரத்துறை - ஓய்வுபெறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள்

Chithra / Dec 9th 2024, 8:45 am
image

 

மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை தொடர்பில் அரசாங்கம் உடனடியாக தீர்மானங்களை எடுக்கத் தவறினால் சுகாதாரத்துறை பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

விசேட மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இந்த மாத இறுதிக்குள் ஓய்வு பெற்றுக்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை 63 ஆக வர்த்தமானியில் அறிவிக்கப்பட வேண்டுமென அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரியுள்ளது.

மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 63லிருந்து 60 ஆக குறைப்பதற்கு கடந்த அரசாங்கம் எடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டு 176 மருத்துவர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுவை பரிசீலனை செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம் ஓய்வு பெறும் வயதெல்லையை 63 ஆக பேணுமாறு உத்தரவிட்டிருந்தது. அமைச்சரவையும் இதற்கு அனுமதி வழங்கியிருந்தது. எனினும் வர்த்தமானி ஊடாக இந்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்ட போதிலும் இதுவரையில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாரிய நெருக்கடியில் சுகாதாரத்துறை - ஓய்வுபெறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள்  மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை தொடர்பில் அரசாங்கம் உடனடியாக தீர்மானங்களை எடுக்கத் தவறினால் சுகாதாரத்துறை பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.விசேட மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இந்த மாத இறுதிக்குள் ஓய்வு பெற்றுக்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை 63 ஆக வர்த்தமானியில் அறிவிக்கப்பட வேண்டுமென அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரியுள்ளது.மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 63லிருந்து 60 ஆக குறைப்பதற்கு கடந்த அரசாங்கம் எடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டு 176 மருத்துவர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.இந்த மனுவை பரிசீலனை செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம் ஓய்வு பெறும் வயதெல்லையை 63 ஆக பேணுமாறு உத்தரவிட்டிருந்தது. அமைச்சரவையும் இதற்கு அனுமதி வழங்கியிருந்தது. எனினும் வர்த்தமானி ஊடாக இந்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை.நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்ட போதிலும் இதுவரையில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement