• Nov 28 2024

அட்டைப்பண்ணையில் ஆயிரத்துக்கு மேற்ப்பட்ட போதை மாத்திரைகள்; இளைஞரை கைது செய்த மன். பொலிசார்..!!

Tamil nila / Jan 29th 2024, 7:55 pm
image

மன்னார் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட செளத்பார் பகுதியில் கைவிடப்பட்ட அட்டைபண்னை ஒன்றில் இருந்து 31 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் பொலிஸ் குற்றப்புலனாய்வுப்  பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், மன்னார் பொலிஸ் அத்தியட்சகர் சந்திரபாலவின்  பணிப்புரைக்கு அமைவாக பொலிஸ் அத்தியட்சகர் ஹாரத்தின்  ஆலோசனையின் பெயரில் மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி சில்வா தலைமையிலான குழுவினர்  செளத்பார் பகுதியில்  நேற்றைய தினம்  மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது போதை மாத்திரைகளுடன் 8 இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அந்தவகையில் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் செளத்பார் பகுதியில் போதை மாத்திரைகளை விற்கமுற்பட்ட இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். 

குறித்த இளைஞனிடன் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் செளத்பார் புகையிரத நிலையப்பகுதி அருகில் கைவிடப்பட்ட அட்டை பண்ணை கொட்டில் ஒன்றில்  புதைத்து வைக்கப்பட்டிருந்த 31 ஆயிரம் போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன. 

கைப்பற்றபட்ட போதை மாத்திரைகள் மற்றும் சந்தேக நபரை மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பொலிஸ்நிலையத்தில் ஒப்படைத்துள்ளதுடன்  விசாரணைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

அட்டைப்பண்ணையில் ஆயிரத்துக்கு மேற்ப்பட்ட போதை மாத்திரைகள்; இளைஞரை கைது செய்த மன். பொலிசார். மன்னார் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட செளத்பார் பகுதியில் கைவிடப்பட்ட அட்டைபண்னை ஒன்றில் இருந்து 31 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மன்னார் பொலிஸ் குற்றப்புலனாய்வுப்  பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், மன்னார் பொலிஸ் அத்தியட்சகர் சந்திரபாலவின்  பணிப்புரைக்கு அமைவாக பொலிஸ் அத்தியட்சகர் ஹாரத்தின்  ஆலோசனையின் பெயரில் மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி சில்வா தலைமையிலான குழுவினர்  செளத்பார் பகுதியில்  நேற்றைய தினம்  மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது போதை மாத்திரைகளுடன் 8 இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.அந்தவகையில் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் செளத்பார் பகுதியில் போதை மாத்திரைகளை விற்கமுற்பட்ட இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். குறித்த இளைஞனிடன் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் செளத்பார் புகையிரத நிலையப்பகுதி அருகில் கைவிடப்பட்ட அட்டை பண்ணை கொட்டில் ஒன்றில்  புதைத்து வைக்கப்பட்டிருந்த 31 ஆயிரம் போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன. கைப்பற்றபட்ட போதை மாத்திரைகள் மற்றும் சந்தேக நபரை மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பொலிஸ்நிலையத்தில் ஒப்படைத்துள்ளதுடன்  விசாரணைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement