வரதட்சணை கேட்டு மருமகளை அறைக்குள் பூட்டி வைத்து பாம்மை விட்டு கடிக்க வைத்த கொடூர சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்தக் கொடூர சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதயில் வசிக்கும் ஷாநவாஸ், ரேஷ்மா என்ற இருவர் கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம் ஆனதிலிருந்தே இரண்டு குடும்பத்தினருக்கும் வரதட்சணை தொடர்பாக பிரச்சனை இருந்து வந்துள்ளது.
கணவன் வீட்டார் கேட்கும் போதெல்லாம் பெண் வீட்டார் அவ்வப்போது பணம் கொடுத்து வந்துள்ளனர். இந்த நிலையில ரேஷ்மாவின் மாமியார் 5 லட்சம் ரூபா கூடுதல் வரதட்சணையாக கேட்டுள்ளார்.
ஆனால் பெண் வீட்டிலிருந்து ஒன்றரை லட்சம் ரூபாவே கொடுத்துள்ளனர். இதனால் ஆவேசமடைந்த குறித்த பெண்ணின் மாமியார் பெண்ணைத் தினமும் கொடுமைப்படுத்த தொடங்கினார்.
குறித்த பெண்ணும் தனது மாமியாருடன் சண்டையிட்டு வந்துள்ளார். சண்டை வலுப்பெற கோபமடைந்த அவரது மாமியார் , தனது மருமகளை ஒரு அறைக்குள் வைத்து பூட்டினார்.
அந்த அறையின் சிறு துளை வழியே ஒரு பாம்பையும் விட்டார். பாம்பை பார்த்து அலறிய ரேஷ்மா பாம்பிடம் இருந்து தப்பிக்க இரவு முழுவதும் போராடினார்.
பெண்ணின் அலறல் சத்தம் கேட்டும் அவரது மாமியார் கதவைத் திறக்கவில்லை. வலியால் துடித்தவர் எப்படியோ முயன்று செல்போனில் தனது தங்கைக் தன் நிலைமையைத் தெரிவித்தார்.
அதனையடுத்து அங்கு சென்ற அவரது சகோதரி, அக்காவின் நிலைமையை பார்த்து பதறிப்போய் கணவன் வீட்டாரிடம் சண்டையிட்டுள்ளார்.
பின்னர் தனது அக்காவை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தார். அதன்பின் இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்துள்ளார்.
முறைப்பாட்டுக்கமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், குறித்த பெண்ணின் கணவன், மாமியார், அவரது சகோதரர், சகோதரிகள் என அனைவர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மருமகளை அறைக்குள் பூட்டி வைத்த மாமியார்; வரதட்சணைக் கொடுமையால் பாம்பை விட்டு கடிக்க வைத்த கொடூரம் வரதட்சணை கேட்டு மருமகளை அறைக்குள் பூட்டி வைத்து பாம்மை விட்டு கடிக்க வைத்த கொடூர சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.இந்தக் கொடூர சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதயில் வசிக்கும் ஷாநவாஸ், ரேஷ்மா என்ற இருவர் கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணம் ஆனதிலிருந்தே இரண்டு குடும்பத்தினருக்கும் வரதட்சணை தொடர்பாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. கணவன் வீட்டார் கேட்கும் போதெல்லாம் பெண் வீட்டார் அவ்வப்போது பணம் கொடுத்து வந்துள்ளனர். இந்த நிலையில ரேஷ்மாவின் மாமியார் 5 லட்சம் ரூபா கூடுதல் வரதட்சணையாக கேட்டுள்ளார். ஆனால் பெண் வீட்டிலிருந்து ஒன்றரை லட்சம் ரூபாவே கொடுத்துள்ளனர். இதனால் ஆவேசமடைந்த குறித்த பெண்ணின் மாமியார் பெண்ணைத் தினமும் கொடுமைப்படுத்த தொடங்கினார்.குறித்த பெண்ணும் தனது மாமியாருடன் சண்டையிட்டு வந்துள்ளார். சண்டை வலுப்பெற கோபமடைந்த அவரது மாமியார் , தனது மருமகளை ஒரு அறைக்குள் வைத்து பூட்டினார். அந்த அறையின் சிறு துளை வழியே ஒரு பாம்பையும் விட்டார். பாம்பை பார்த்து அலறிய ரேஷ்மா பாம்பிடம் இருந்து தப்பிக்க இரவு முழுவதும் போராடினார்.பெண்ணின் அலறல் சத்தம் கேட்டும் அவரது மாமியார் கதவைத் திறக்கவில்லை. வலியால் துடித்தவர் எப்படியோ முயன்று செல்போனில் தனது தங்கைக் தன் நிலைமையைத் தெரிவித்தார். அதனையடுத்து அங்கு சென்ற அவரது சகோதரி, அக்காவின் நிலைமையை பார்த்து பதறிப்போய் கணவன் வீட்டாரிடம் சண்டையிட்டுள்ளார். பின்னர் தனது அக்காவை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தார். அதன்பின் இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்துள்ளார். முறைப்பாட்டுக்கமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், குறித்த பெண்ணின் கணவன், மாமியார், அவரது சகோதரர், சகோதரிகள் என அனைவர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.