• Nov 26 2024

கைகள் கட்டப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட வயோதிபத் தாய்; களமிறக்கப்பட்ட மோப்ப நாய் - பொலிஸார் தீவிர விசாரணை

Chithra / Aug 12th 2024, 11:27 am
image

புத்தளம், மதுரங்குளிய நல்லன்தலுவ பிரதேசத்தில் 3 பிள்ளைகளின்  தாய் ஒருவர்  நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) மாலை கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

மதுரங்குளிய நல்லன்தலுவ பிரதேசத்தைச் சேர்ந்த செல்வமரிக்கார் அயினா உம்மா என்ற 71 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலமாக மீட்கப்பட்ட குறித்த வயோதிப பெண் நீண்ட காலமாக தனக்கு சொந்தமான இரண்டரை ஏக்கர் தென்னந்தோட்டத்தில் உள்ள வீட்டில் தனிமையில் வசித்து வந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன் தினம் (10) இரவு வீட்டில் இருந்து இரண்டு கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள தனது மகளின் வீட்டிற்குச் சென்றுள்ளதுடன், இரவு நேர உணவை உட்கொண்ட பின்னர் மீண்டும் வீட்டுக்கு வந்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை (11) பிற்பகல் 3 மணியளவில் வயோதிப பெண்ணின் உறவினர்கள் இருவர் வீட்டுக்கு வருகை தந்துள்ளதாகவும், அந்த வயோதிப பெண் தங்கியிருந்த வீட்டின் முன் கதவு திறந்திருந்த நிலையில் அவரை தேடியுள்ளனர் என சொல்லப்படுகிறது.

பின்னர், வீட்டுக்குள் சென்று படுக்கை அறையில் பார்த்த போது அந்த வயோதிப பெண் இரண்டு கைகளும் கட்டப்பட்ட நிலையில் கட்டிலில் சடலமாக காணப்பட்டுள்ளார். 

இதனையடுத்து, சம்பவம் பற்றி  வயோதிப பெண்ணின் மகளுக்கு அறிவிக்கப்பட்டதுடன், இதுதொடர்பில் பொலிஸ் அவசர பிரிவினருக்கும், மதுரங்குளி பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த மதுரங்குளி பொலிஸாரும், புத்தளம் பிரிவு பொலிஸ் தடயவியல் பிரிவினரும் இணைந்து ஆரம்ப கட்ட விசாரணைகளை முன்னெடுத்தனர்.

குறித்த வயோதிப பெண் தங்கியிருந்த வீட்டின் மூன்று ஓடுகள் பிரிக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் கூறினர்.

சம்பவம் இடம்பெற்ற இரவு வயோதிப பெண் தனது மகளின் வீட்டுக்கு சென்று மீண்டும் தனது வீட்டுக்கு வரும் முன்னர் சந்தேக நபர்கள் இவ்வாறு வீட்டின் கூரையை பிரித்துக் கொண்டு உள்ளே பதுங்கி இருந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மேலும் சம்பவ இடத்திற்கு பொலிஸ் மோப்ப நாயும் அழைத்துவரப்பட்டு அந்த வயோதிப பெண் தங்கியிருந்த வீடு மற்றும் வளவு என்பனவும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

அத்துடன், புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் உதயகுமார, பதில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் பியந்த ஆகியோரும் சம்பவ இடத்திற்கு விஜயம் செய்து மேற்பார்வை செய்து, மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்கு தேவையான ஆலோசனைகளை பொலிஸாருக்கு வழங்கியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த புத்தளம் மாவட்ட பதில் நீதிவான் ஏ.எம்.சம்சுல் ராபி, சடலத்தை பார்வையிட்டு,  விசாரணையை முன்னெடுத்ததுடன், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

குறித்த வயோதிப பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் நல்லாந்தளுவ பகுதியில் பெரும் பரபரப்பையும் மக்கள் மத்தியில் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


கைகள் கட்டப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட வயோதிபத் தாய்; களமிறக்கப்பட்ட மோப்ப நாய் - பொலிஸார் தீவிர விசாரணை புத்தளம், மதுரங்குளிய நல்லன்தலுவ பிரதேசத்தில் 3 பிள்ளைகளின்  தாய் ஒருவர்  நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) மாலை கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.மதுரங்குளிய நல்லன்தலுவ பிரதேசத்தைச் சேர்ந்த செல்வமரிக்கார் அயினா உம்மா என்ற 71 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சடலமாக மீட்கப்பட்ட குறித்த வயோதிப பெண் நீண்ட காலமாக தனக்கு சொந்தமான இரண்டரை ஏக்கர் தென்னந்தோட்டத்தில் உள்ள வீட்டில் தனிமையில் வசித்து வந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.இந்த நிலையில் நேற்று முன் தினம் (10) இரவு வீட்டில் இருந்து இரண்டு கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள தனது மகளின் வீட்டிற்குச் சென்றுள்ளதுடன், இரவு நேர உணவை உட்கொண்ட பின்னர் மீண்டும் வீட்டுக்கு வந்துள்ளார் எனக் கூறப்படுகிறது.மறுநாள் ஞாயிற்றுக்கிழமை (11) பிற்பகல் 3 மணியளவில் வயோதிப பெண்ணின் உறவினர்கள் இருவர் வீட்டுக்கு வருகை தந்துள்ளதாகவும், அந்த வயோதிப பெண் தங்கியிருந்த வீட்டின் முன் கதவு திறந்திருந்த நிலையில் அவரை தேடியுள்ளனர் என சொல்லப்படுகிறது.பின்னர், வீட்டுக்குள் சென்று படுக்கை அறையில் பார்த்த போது அந்த வயோதிப பெண் இரண்டு கைகளும் கட்டப்பட்ட நிலையில் கட்டிலில் சடலமாக காணப்பட்டுள்ளார். இதனையடுத்து, சம்பவம் பற்றி  வயோதிப பெண்ணின் மகளுக்கு அறிவிக்கப்பட்டதுடன், இதுதொடர்பில் பொலிஸ் அவசர பிரிவினருக்கும், மதுரங்குளி பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.சம்பவ இடத்திற்கு வருகை தந்த மதுரங்குளி பொலிஸாரும், புத்தளம் பிரிவு பொலிஸ் தடயவியல் பிரிவினரும் இணைந்து ஆரம்ப கட்ட விசாரணைகளை முன்னெடுத்தனர்.குறித்த வயோதிப பெண் தங்கியிருந்த வீட்டின் மூன்று ஓடுகள் பிரிக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் கூறினர்.சம்பவம் இடம்பெற்ற இரவு வயோதிப பெண் தனது மகளின் வீட்டுக்கு சென்று மீண்டும் தனது வீட்டுக்கு வரும் முன்னர் சந்தேக நபர்கள் இவ்வாறு வீட்டின் கூரையை பிரித்துக் கொண்டு உள்ளே பதுங்கி இருந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.மேலும் சம்பவ இடத்திற்கு பொலிஸ் மோப்ப நாயும் அழைத்துவரப்பட்டு அந்த வயோதிப பெண் தங்கியிருந்த வீடு மற்றும் வளவு என்பனவும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.அத்துடன், புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் உதயகுமார, பதில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் பியந்த ஆகியோரும் சம்பவ இடத்திற்கு விஜயம் செய்து மேற்பார்வை செய்து, மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்கு தேவையான ஆலோசனைகளை பொலிஸாருக்கு வழங்கியுள்ளனர்.சம்பவ இடத்திற்கு வருகை தந்த புத்தளம் மாவட்ட பதில் நீதிவான் ஏ.எம்.சம்சுல் ராபி, சடலத்தை பார்வையிட்டு,  விசாரணையை முன்னெடுத்ததுடன், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.குறித்த வயோதிப பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் நல்லாந்தளுவ பகுதியில் பெரும் பரபரப்பையும் மக்கள் மத்தியில் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement