• Aug 18 2025

ஆங்கிலத்தில் பேசிய தாய் அழுது புலம்பிய மகன்; “தமிழ்ல பேசு அம்மா” வைரலாகும் காணொளி!

shanuja / Aug 18th 2025, 11:37 am
image

ஆங்கிலத்தில் தாய் ஒருவர் பேசியதையடுத்து “தமிழ்ல பேசு அம்மா” என மகன் ஒருவர் புலம்பிய காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. 


இந்த நெகிழ்ச்சிச் சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில், 

வீட்டில் இரு பிள்ளைகளுக்குத் தாயொருவர் பாடம் சொல்லிக் கொடுத்துள்ளார். அதன்போது அவரது இளையமகன் திடீரென தாயருகே சிணுங்கியபடி வந்தார். 


அவ்வேளை தாய் மகனைப் பார்த்து whats your problem என ஆங்கிலத்தில் கேட்டுள்ளார். அதற்கு மகன் உடனே  “தமிழ்ல பேசு அம்மா” என்று சிணுங்கியவாறு அழ ஆரம்பித்து விட்டார். 


தாய் திரும்ப திரும்ப ஆங்கிலத்தில் பேச அவரது மகன் “தமிழ்ல பேசு அம்மா”, “தமிழ்ல பேசு அம்மா” என்று கத்திக் கூச்சலிட்டு அழுதுள்ளார். 


இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களைக் கவர்ந்து வைரலாகியுள்ளது. 


இன்றைய நவீன காலத்தில் ஆங்கில மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் மத்தியில் சிறுவன் ஒருவன் தாயிடம் தமிழில் பேசும்படி தெரிவித்து அழுதுள்ள காட்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆங்கிலத்தில் பேசிய தாய் அழுது புலம்பிய மகன்; “தமிழ்ல பேசு அம்மா” வைரலாகும் காணொளி ஆங்கிலத்தில் தாய் ஒருவர் பேசியதையடுத்து “தமிழ்ல பேசு அம்மா” என மகன் ஒருவர் புலம்பிய காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த நெகிழ்ச்சிச் சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில், வீட்டில் இரு பிள்ளைகளுக்குத் தாயொருவர் பாடம் சொல்லிக் கொடுத்துள்ளார். அதன்போது அவரது இளையமகன் திடீரென தாயருகே சிணுங்கியபடி வந்தார். அவ்வேளை தாய் மகனைப் பார்த்து whats your problem என ஆங்கிலத்தில் கேட்டுள்ளார். அதற்கு மகன் உடனே  “தமிழ்ல பேசு அம்மா” என்று சிணுங்கியவாறு அழ ஆரம்பித்து விட்டார். தாய் திரும்ப திரும்ப ஆங்கிலத்தில் பேச அவரது மகன் “தமிழ்ல பேசு அம்மா”, “தமிழ்ல பேசு அம்மா” என்று கத்திக் கூச்சலிட்டு அழுதுள்ளார். இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களைக் கவர்ந்து வைரலாகியுள்ளது. இன்றைய நவீன காலத்தில் ஆங்கில மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் மத்தியில் சிறுவன் ஒருவன் தாயிடம் தமிழில் பேசும்படி தெரிவித்து அழுதுள்ள காட்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement