• Jun 22 2024

தனது மகளை தவறான முறையில் வீடியோ எடுத்த தாய்! தமிழர் பகுதியில் அதிர்ச்சி சம்பவம்

Chithra / Jun 14th 2024, 7:28 am
image

Advertisement

  

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, தேவிபுரம் பாரதி வீதி பகுதியில் தனது மகளை தவறான முறையில் கையடக்க தொலைபேசியில் காணொளி எடுத்த  தாய் ஒருவர்  கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவமானது நேற்று முன்தினம் (12)  இடம்பெற்றுள்ளது.

இதன்போது 32 வயதுடைய இரண்டு பதின்ம வயது பெண் பிள்ளைகளின் தாயே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கணவனை பிரிந்த நிலையில் வாழ்ந்து வரும் இவர்,

தனது 13 வயதுடைய மகள் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தவேளை அவரை தவறான முறையில் காணொளி எடுத்துள்ளார்.

இதனை சிறுமியின் தங்கையான 10 வயது சிறுமி கண்டதையடுத்து தனது சித்திக்கு தெரியப்படுத்தியுள்ளார். 

இந்த சம்பவம் தொடர்பில் உடனடியாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து குறித்த தாயார் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் புதுக்குடியிருப்பு பொலிஸார் ஈடுபட்டு வருவதாக தெரியவருகின்றது.

தனது மகளை தவறான முறையில் வீடியோ எடுத்த தாய் தமிழர் பகுதியில் அதிர்ச்சி சம்பவம்   முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, தேவிபுரம் பாரதி வீதி பகுதியில் தனது மகளை தவறான முறையில் கையடக்க தொலைபேசியில் காணொளி எடுத்த  தாய் ஒருவர்  கைதுசெய்யப்பட்டுள்ளார்.குறித்த சம்பவமானது நேற்று முன்தினம் (12)  இடம்பெற்றுள்ளது.இதன்போது 32 வயதுடைய இரண்டு பதின்ம வயது பெண் பிள்ளைகளின் தாயே கைதுசெய்யப்பட்டுள்ளார்.கணவனை பிரிந்த நிலையில் வாழ்ந்து வரும் இவர்,தனது 13 வயதுடைய மகள் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தவேளை அவரை தவறான முறையில் காணொளி எடுத்துள்ளார்.இதனை சிறுமியின் தங்கையான 10 வயது சிறுமி கண்டதையடுத்து தனது சித்திக்கு தெரியப்படுத்தியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் உடனடியாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து குறித்த தாயார் கைது செய்யப்பட்டுள்ளார்.கைதுசெய்யப்பட்ட நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் புதுக்குடியிருப்பு பொலிஸார் ஈடுபட்டு வருவதாக தெரியவருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement