• May 03 2024

தாயின் கவனக்குறைவு!! முச்சக்கரவண்டியில் இருந்து விழுந்த ஒரு மாத கைக்குழந்தை..!

Tamil nila / Feb 29th 2024, 7:48 pm
image

Advertisement

தாயின் கையிலிருந்து தவறி விழுந்த நிலையில் ஒரு மாத குழந்தையொன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ள சம்பவமொன்று  பதிவாகியுள்ளது.

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் கிதுல்கல பிரதேசத்தில் குறித்த சம்பவம் நேற்று இரவு 11.35 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு குடும்பங்கள் இரண்டு முச்சக்கரவண்டிகளில்   கதிர்காமம் ஊடாக நுவரெலியாவிற்கு சுற்றுலா சென்று மீண்டும் நீர்கொழும்பு நோக்கி திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​கித்துல்கல குருமெடிய பிரதேசத்தில் அதில் ஒரு முச்சக்கரவண்டியில் இருந்த தாயின் கையில் இருந்த குழந்தை தவறி வீதியில் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் அதே வீதியில் முச்சக்கரவண்டியை பின்தொடர்ந்து வந்த கார் ஒன்று, வீதியில் விழுந்து கிடந்த குழந்தையை கண்டு வாகனத்தை மீண்டும் திருப்பிச் சென்று சோதனையிட்டுள்ளார்.

அத்துடன்  காரில் இருந்தவர்கள்  கைக் குழந்தையை கித்துல்கல பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்று ஒப்படைத்ததுடன், பொலிசார் உடனடியாக குழந்தையை கித்துல்கல வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

பின்னர் குழந்தை இல்லாததை அறிந்த முச்சக்கரவண்டியில் பயணித்தவர்கள் திரும்பிச் சென்று வீதியில் தேடிய போது குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து தாய் மற்றும் குழுவினர் கித்துல்கல வைத்தியசாலைக்கு சென்றுள்ள நிலையில், குழந்தையை தாயுடன் உடனடியாக கரவனெல்ல வைத்தியசாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தர்ப்பத்தில் தாய் தூங்கியிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

பின்னர் அங்கு மேற்கொள்ளப்பட்ட வைத்திய பரிசோதனைகளில் குழந்தை பத்திரமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

இன்று கித்துல்கல பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்ட பின்னர் மேலதிக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தாயின் கவனக்குறைவு முச்சக்கரவண்டியில் இருந்து விழுந்த ஒரு மாத கைக்குழந்தை. தாயின் கையிலிருந்து தவறி விழுந்த நிலையில் ஒரு மாத குழந்தையொன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ள சம்பவமொன்று  பதிவாகியுள்ளது.ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் கிதுல்கல பிரதேசத்தில் குறித்த சம்பவம் நேற்று இரவு 11.35 மணியளவில் இடம்பெற்றுள்ளது.இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு குடும்பங்கள் இரண்டு முச்சக்கரவண்டிகளில்   கதிர்காமம் ஊடாக நுவரெலியாவிற்கு சுற்றுலா சென்று மீண்டும் நீர்கொழும்பு நோக்கி திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​கித்துல்கல குருமெடிய பிரதேசத்தில் அதில் ஒரு முச்சக்கரவண்டியில் இருந்த தாயின் கையில் இருந்த குழந்தை தவறி வீதியில் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.பின்னர் அதே வீதியில் முச்சக்கரவண்டியை பின்தொடர்ந்து வந்த கார் ஒன்று, வீதியில் விழுந்து கிடந்த குழந்தையை கண்டு வாகனத்தை மீண்டும் திருப்பிச் சென்று சோதனையிட்டுள்ளார்.அத்துடன்  காரில் இருந்தவர்கள்  கைக் குழந்தையை கித்துல்கல பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்று ஒப்படைத்ததுடன், பொலிசார் உடனடியாக குழந்தையை கித்துல்கல வைத்தியசாலையில் அனுமதித்தனர்.பின்னர் குழந்தை இல்லாததை அறிந்த முச்சக்கரவண்டியில் பயணித்தவர்கள் திரும்பிச் சென்று வீதியில் தேடிய போது குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை தெரியவந்துள்ளது.இதனையடுத்து தாய் மற்றும் குழுவினர் கித்துல்கல வைத்தியசாலைக்கு சென்றுள்ள நிலையில், குழந்தையை தாயுடன் உடனடியாக கரவனெல்ல வைத்தியசாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.குறித்த சந்தர்ப்பத்தில் தாய் தூங்கியிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.பின்னர் அங்கு மேற்கொள்ளப்பட்ட வைத்திய பரிசோதனைகளில் குழந்தை பத்திரமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.இன்று கித்துல்கல பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்ட பின்னர் மேலதிக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement