• Jan 26 2025

நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிளும் லொறியும்; ஒருவர் படுகாயம்..!

Sharmi / Jan 4th 2025, 1:37 pm
image

மோட்டார் சைக்கிளும், லொறியும் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்து கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியின் கொட்டகலை மேபீல்ட் பகுதியில் இன்று(04) காலை 11 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கொட்டகலை பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த லொறியில் ஹட்டனிலிருந்து கொட்டகலை பகுதியை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிள் பலத்த சேதமடைந்துள்ளதாகவும், லொறி சாரதி கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமையே விபத்துக்குக் காரணம் எனவும், எனவே சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாகவும் திம்புள்ள பத்தனை பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.



நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிளும் லொறியும்; ஒருவர் படுகாயம். மோட்டார் சைக்கிளும், லொறியும் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்து கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியின் கொட்டகலை மேபீல்ட் பகுதியில் இன்று(04) காலை 11 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.கொட்டகலை பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த லொறியில் ஹட்டனிலிருந்து கொட்டகலை பகுதியை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.விபத்தில் மோட்டார் சைக்கிள் பலத்த சேதமடைந்துள்ளதாகவும், லொறி சாரதி கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமையே விபத்துக்குக் காரணம் எனவும், எனவே சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாகவும் திம்புள்ள பத்தனை பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement