• Apr 03 2025

மின் கம்பத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்...!பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு...!samugammedia

Sharmi / Jan 4th 2024, 4:01 pm
image

 மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மின் கம்பத்தில் மோதி உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம்  தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

58 வயதுடைய கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்  பயணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

இச் சம்பவத்தில் காயமடைந்த நிலையில் கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம்  தொடர்பான மேலதிக விசாரணைகளை பேலியகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




 

மின் கம்பத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்.பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு.samugammedia  மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மின் கம்பத்தில் மோதி உயிரிழந்துள்ளார்.இச் சம்பவம்  தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,58 வயதுடைய கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்  பயணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.இச் சம்பவத்தில் காயமடைந்த நிலையில் கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இச் சம்பவம்  தொடர்பான மேலதிக விசாரணைகளை பேலியகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement