• May 25 2026

கன்ரருடன் மோதிய மோட்டார்சைக்கிள்; சிதறிய பாகங்கள் - ஒருவர் படுகாயம்!

shanu / Apr 3rd 2026, 10:16 am
image

கன்ரருடன் மோட்டார்சைக்கிள் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  


இந்த விபத்துச் சம்பவம் கண்டி - கம்பொல  – தொளுவ பிரதான சாலையில்  இடம்பெற்றுள்ளது.


தொளுவ பகுதியில் இருந்து கம்பொல நோக்கிச் சென்ற  கன்டர் வாகனமும், கம்பொல பகுதியிலிருந்து தொளுவ நோக்கி வந்த மோட்டார் சைக்கிளும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.


இதன்போது மோட்டார் சைக்கிளை  செலுத்திச் சென்ற சாரதி,  கன்டருடன் மோதியதில் படுகாயமடைந்துள்ளார். 


படுகாயமடைந்த சாரதி தற்போது  கம்பொல அடிப்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.


அத்துடன் விபத்தில் சாரதியின் தலைக்கவசம் உட்பட மோட்டார்சைக்கிளின் பாகங்கள் வீதியில் ஆங்காங்கே சிதறிக் கிடந்துள்ளன. 


விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கன்ரருடன் மோதிய மோட்டார்சைக்கிள்; சிதறிய பாகங்கள் - ஒருவர் படுகாயம் கன்ரருடன் மோட்டார்சைக்கிள் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இந்த விபத்துச் சம்பவம் கண்டி - கம்பொல  – தொளுவ பிரதான சாலையில்  இடம்பெற்றுள்ளது.தொளுவ பகுதியில் இருந்து கம்பொல நோக்கிச் சென்ற  கன்டர் வாகனமும், கம்பொல பகுதியிலிருந்து தொளுவ நோக்கி வந்த மோட்டார் சைக்கிளும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.இதன்போது மோட்டார் சைக்கிளை  செலுத்திச் சென்ற சாரதி,  கன்டருடன் மோதியதில் படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்த சாரதி தற்போது  கம்பொல அடிப்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.அத்துடன் விபத்தில் சாரதியின் தலைக்கவசம் உட்பட மோட்டார்சைக்கிளின் பாகங்கள் வீதியில் ஆங்காங்கே சிதறிக் கிடந்துள்ளன. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement