• Mar 09 2026

வவுனியாவில் துவிச்சக்கர வண்டியுடன் மோதிய மோட்டார் சைக்கிள்; ஒருவர் பலி - இருவர் படுகாயம்

Chithra / Mar 8th 2026, 12:31 pm
image

 வவுனியா - புளியங்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்து சம்பவமானது நேற்று நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவில் இருந்து குருநாகல் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் முன்னே சென்ற துவிச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி மற்றும் துவிச்சக்கர வண்டி சாரதி படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், மோட்டார் சைக்கிளின் பயணித்த மற்றையவர் பலியாகியுள்ளார். 

குருணாகல் பகுதியை சேர்ந்த 59 வயதுடைய உமர் லெப்பை அப்துல் ரவூப் என்பவரே குறித்த விபத்தில் பலியாகியுள்ளார்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை  புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


வவுனியாவில் துவிச்சக்கர வண்டியுடன் மோதிய மோட்டார் சைக்கிள்; ஒருவர் பலி - இருவர் படுகாயம்  வவுனியா - புளியங்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த விபத்து சம்பவமானது நேற்று நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.முல்லைத்தீவில் இருந்து குருநாகல் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் முன்னே சென்ற துவிச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.இவ்விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி மற்றும் துவிச்சக்கர வண்டி சாரதி படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், மோட்டார் சைக்கிளின் பயணித்த மற்றையவர் பலியாகியுள்ளார். குருணாகல் பகுதியை சேர்ந்த 59 வயதுடைய உமர் லெப்பை அப்துல் ரவூப் என்பவரே குறித்த விபத்தில் பலியாகியுள்ளார்.இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை  புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement