வவுனியா - பூனாவை பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து தொடர்பாக தெரியவருகையில்,
நேற்று மாலை குறித்த நபர் பூனாவை பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.
இதன்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியின் அருகில் இருந்த தூணுடன் மோதி விபத்திற்குள்ளாகியது.
விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திச்சென்ற நபர் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும் அவர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் பூனாவை வாரக்வெவ பகுதியை சேர்ந்த வயது 30 வயதான நபரே உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பாக பூனாவை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வவுனியாவில் கட்டுப்பாட்டை இழந்து தூணுடன் மோதிய மோட்டார் சைக்கிள்; ஒருவர் பலி வவுனியா - பூனாவை பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.குறித்த விபத்து தொடர்பாக தெரியவருகையில், நேற்று மாலை குறித்த நபர் பூனாவை பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். இதன்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியின் அருகில் இருந்த தூணுடன் மோதி விபத்திற்குள்ளாகியது. விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திச்சென்ற நபர் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.எனினும் அவர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் பூனாவை வாரக்வெவ பகுதியை சேர்ந்த வயது 30 வயதான நபரே உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பாக பூனாவை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.