• Apr 02 2025

வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள்- இளைஞன் மரணம்..!

Sharmi / Jul 31st 2024, 3:42 pm
image

குருணாகல் இப்பாகமுவ - மடகல்ல வீதியில் கும்புக்வெவ பகுதியில் நேற்றையதினம்(30) இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மடகல்லவிலிருந்து இப்பாகமுவ நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்றவர் படுகாயமடைந்துள்ள நிலையில், ஹிரிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக கும்புக்கெட்டே பொலிஸார் தெரிவித்தனர்.

புஸ்ஸெலிதென்ன பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞரொருவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கும்புக்கெட்டே பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள்- இளைஞன் மரணம். குருணாகல் இப்பாகமுவ - மடகல்ல வீதியில் கும்புக்வெவ பகுதியில் நேற்றையதினம்(30) இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.மடகல்லவிலிருந்து இப்பாகமுவ நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்றவர் படுகாயமடைந்துள்ள நிலையில், ஹிரிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக கும்புக்கெட்டே பொலிஸார் தெரிவித்தனர்.புஸ்ஸெலிதென்ன பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞரொருவரே உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கும்புக்கெட்டே பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement