• Jul 16 2026

குடமுருட்டிப் பாலத்தின் நிர்மானப் பணிகளைப் பார்வையிட்ட ரவிகரன் எம்.பி!

shanu / Jul 16th 2026, 5:02 pm
image

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நெடுங்கேணி கூழாங்குளம் வீதியில் அமைந்துள்ள குடமுருட்டிப்பாலத்தினை புதிதாக அமைக்குமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தநிலையில்,தற்போது குறித்த பாலத்தினை புதிதாக அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


இந்நிலையில் இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டுள்ள குறித்த குடமுருட்டிப்பாலத்தின் நிர்மானப் பணிகளை நாடாளுன்ற உறுப்பினர் ரவிகரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.


இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,


வவுனியா வடக்கு பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட நெடுங்கேணி கூழாங்குளம் வீதியில் அமைந்துள்ள குடமுருட்டிப் பாலம் சீரின்றிய நிலையிலும், மிகவும் ஒடுங்கிய பாலமாகவும் காணப்பட்டதால் அப்பாலத்தினூடாகப் பயணிக்கும் பொதுமக்கள் பலத்த போகுவரத்து இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவந்தனர்.


இந்நிலையில் அப்பகுதி மக்களால் இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தது.


அதற்கமைய நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் குறித்த குடமுருட்டிப் பாலத்தின் சீரமைப்புத் தொடர்பில் வவுனியாவடக்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களில் தொடர்ச்சியாக வலியுறுத்திவந்தார்.


அதேவேளை 10.02.2026அன்று வவுனியா மாவட்டசெயலகத்தில் இடம்பெற்ற விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் விமல் ரத்நாயக்கவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் குடமுருட்டிப்பாலத்தைச் சீரமைத்துத்தருமாறு கோரிக்கைவிடுத்திருந்தார்.


அதற்கமைய குறித்த பாலம் தொடர்பில் அமைச்சர் விமல் ரத்நாயக்க வீதி அபிவிருத்தித் திணைக்களத்திடம் விளக்கங்கோரியிருந்தார்.


அந்தவகையில் 19மீற்றர் நீளமான குறித்த குடமுருட்டிப் பாலத்தை அமைப்பதற்கு ஏறத்தாள 80மில்லியன்ரூபா அளவில் நிதி தேவைப்படுமென வவுனியா மாவட்ட வீதி அபாவிருத்தித் திணைக்கள பிரதம பொறியியலாளர் கே.கௌசிகன் பதில் வழங்கியிருந்தார்.


இந்நிலையில் இவ்வாண்டிற்கான மாகாணக்குறித்தொதுக்கப்பட்ட நிதியில் குறித்த குடமுருட்டிப் பாலத்தினை அமைப்பதற்கு தம்மால் நிதி ஒதுக்கீடு செய்யப்படுமென வடமாகாண பிரதமசெயலாளர் திருமதி.தனுஜா முருகேசன் உறுதியளித்தார்.


இத்தகையசூழலில் குறித்த பாலத்தைச் சீரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டுள்ள குடமுருட்டிப்பாலத்தின் நிர்மானப்பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் நேரில் சென்று பார்வையிட்டார்.


அத்தோடு குறித்த பாலத்தின் நிர்மானப்பணி தொடர்பான விவரங்களை நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது வீதி அபிவிருத்தித் திணைக்கள பொறியியலாளரிடம் தொலைபேசியூடாக கேட்டறிந்துகொண்டார்.


அதற்கமைய இதன்போது வீதி அபிவிருத்தித் திணைக்களப்பொறியியலாளர் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் பதிலளிக்கையில்,


குறித்த குடமுருட்டிப் பாலமானது 49.4மில்லியன்ரூபாயில் நிர்மாணிக்கப்படவுள்ளதாகத் தெரிவித்தார். அத்தோடு குறித்த பாலமானது 28மீற்றர் நீளமாகவும், 8.5மீற்றர் அகலமாகவும் அமைக்கப்படவுள்ளதாகவும் இதன்போது பொறியியலாளரால் பதில் வழங்கப்பட்டதுடன், பாலத்துடன் இணைந்த 140மீற்றர் அணுகுசாலையும் அமைக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டது.


மேலும் இந்த களவிஜயத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களுடன், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வவுனியாவடக்கு பிரதேசசபை உறுப்பினர்களான செ.சுசீலன், த.தனுசன், இலங்கைத் தமிழ் அனசுக் கட்சியின் வவுனியா வடக்கு பிரதேசக்கிளையின் செயலாளர் அமலன் ஆகியோர் பங்கேற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

குடமுருட்டிப் பாலத்தின் நிர்மானப் பணிகளைப் பார்வையிட்ட ரவிகரன் எம்.பி வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நெடுங்கேணி கூழாங்குளம் வீதியில் அமைந்துள்ள குடமுருட்டிப்பாலத்தினை புதிதாக அமைக்குமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தநிலையில்,தற்போது குறித்த பாலத்தினை புதிதாக அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டுள்ள குறித்த குடமுருட்டிப்பாலத்தின் நிர்மானப் பணிகளை நாடாளுன்ற உறுப்பினர் ரவிகரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,வவுனியா வடக்கு பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட நெடுங்கேணி கூழாங்குளம் வீதியில் அமைந்துள்ள குடமுருட்டிப் பாலம் சீரின்றிய நிலையிலும், மிகவும் ஒடுங்கிய பாலமாகவும் காணப்பட்டதால் அப்பாலத்தினூடாகப் பயணிக்கும் பொதுமக்கள் பலத்த போகுவரத்து இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவந்தனர்.இந்நிலையில் அப்பகுதி மக்களால் இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தது.அதற்கமைய நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் குறித்த குடமுருட்டிப் பாலத்தின் சீரமைப்புத் தொடர்பில் வவுனியாவடக்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களில் தொடர்ச்சியாக வலியுறுத்திவந்தார்.அதேவேளை 10.02.2026அன்று வவுனியா மாவட்டசெயலகத்தில் இடம்பெற்ற விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் விமல் ரத்நாயக்கவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் குடமுருட்டிப்பாலத்தைச் சீரமைத்துத்தருமாறு கோரிக்கைவிடுத்திருந்தார்.அதற்கமைய குறித்த பாலம் தொடர்பில் அமைச்சர் விமல் ரத்நாயக்க வீதி அபிவிருத்தித் திணைக்களத்திடம் விளக்கங்கோரியிருந்தார்.அந்தவகையில் 19மீற்றர் நீளமான குறித்த குடமுருட்டிப் பாலத்தை அமைப்பதற்கு ஏறத்தாள 80மில்லியன்ரூபா அளவில் நிதி தேவைப்படுமென வவுனியா மாவட்ட வீதி அபாவிருத்தித் திணைக்கள பிரதம பொறியியலாளர் கே.கௌசிகன் பதில் வழங்கியிருந்தார்.இந்நிலையில் இவ்வாண்டிற்கான மாகாணக்குறித்தொதுக்கப்பட்ட நிதியில் குறித்த குடமுருட்டிப் பாலத்தினை அமைப்பதற்கு தம்மால் நிதி ஒதுக்கீடு செய்யப்படுமென வடமாகாண பிரதமசெயலாளர் திருமதி.தனுஜா முருகேசன் உறுதியளித்தார்.இத்தகையசூழலில் குறித்த பாலத்தைச் சீரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டுள்ள குடமுருட்டிப்பாலத்தின் நிர்மானப்பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் நேரில் சென்று பார்வையிட்டார்.அத்தோடு குறித்த பாலத்தின் நிர்மானப்பணி தொடர்பான விவரங்களை நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது வீதி அபிவிருத்தித் திணைக்கள பொறியியலாளரிடம் தொலைபேசியூடாக கேட்டறிந்துகொண்டார்.அதற்கமைய இதன்போது வீதி அபிவிருத்தித் திணைக்களப்பொறியியலாளர் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் பதிலளிக்கையில்,குறித்த குடமுருட்டிப் பாலமானது 49.4மில்லியன்ரூபாயில் நிர்மாணிக்கப்படவுள்ளதாகத் தெரிவித்தார். அத்தோடு குறித்த பாலமானது 28மீற்றர் நீளமாகவும், 8.5மீற்றர் அகலமாகவும் அமைக்கப்படவுள்ளதாகவும் இதன்போது பொறியியலாளரால் பதில் வழங்கப்பட்டதுடன், பாலத்துடன் இணைந்த 140மீற்றர் அணுகுசாலையும் அமைக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டது.மேலும் இந்த களவிஜயத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களுடன், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வவுனியாவடக்கு பிரதேசசபை உறுப்பினர்களான செ.சுசீலன், த.தனுசன், இலங்கைத் தமிழ் அனசுக் கட்சியின் வவுனியா வடக்கு பிரதேசக்கிளையின் செயலாளர் அமலன் ஆகியோர் பங்கேற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement