குச்சவெளி இளந்தைக்குளம் மீள்குடியேற்றக் கிராமத்திற்குச் சொந்தமான காணியை விகாரைக்காக நேற்று (26) அத்துமீறி துப்பரவு செய்ததை பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் உடனடியாக மாவட்ட செயலாளரின் கவனத்திற்கு கொண்டுவந்ததையடுத்து அப் பணி இடைநிறுத்தப்பட்டது.
இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் இன்று(27) அக்காணியை பார்வையிடுவதற்காக கள விஜயம் மேற்கொண்டதுடன் அக்காணியை உரிய மக்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.
இன்றைய விஜயத்தின்போது குச்சவெளி் பிரதேச செயலாளர் கே. குனநாதன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான ஆசிக், பளீல் அமீன், உயர்பீட உறுப்பினர் அன்ஸார் ஹாஜியார், இளைஞர் சேவை உத்தியோகத்தர் பமீஸ், றகீம் தலைவர், அஸீஸ் மௌலவி, கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் அமீர் ஜஹான், கிண்ணியா இளைஞர் அமைப்பாளர் ஜர்சாத் ஏ மஜீத், யாஸீர் மற்றும் பிரதேச மக்கள் கலந்து கொண்டனர்.
குச்சவெளி இளந்தைக்குளம் மீள்குடியேற்ற கிராமத்திற்கு எம்.எஸ்.தௌபீக் கள விஜயம். குச்சவெளி இளந்தைக்குளம் மீள்குடியேற்றக் கிராமத்திற்குச் சொந்தமான காணியை விகாரைக்காக நேற்று (26) அத்துமீறி துப்பரவு செய்ததை பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் உடனடியாக மாவட்ட செயலாளரின் கவனத்திற்கு கொண்டுவந்ததையடுத்து அப் பணி இடைநிறுத்தப்பட்டது. இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் இன்று(27) அக்காணியை பார்வையிடுவதற்காக கள விஜயம் மேற்கொண்டதுடன் அக்காணியை உரிய மக்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. இன்றைய விஜயத்தின்போது குச்சவெளி் பிரதேச செயலாளர் கே. குனநாதன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான ஆசிக், பளீல் அமீன், உயர்பீட உறுப்பினர் அன்ஸார் ஹாஜியார், இளைஞர் சேவை உத்தியோகத்தர் பமீஸ், றகீம் தலைவர், அஸீஸ் மௌலவி, கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் அமீர் ஜஹான், கிண்ணியா இளைஞர் அமைப்பாளர் ஜர்சாத் ஏ மஜீத், யாஸீர் மற்றும் பிரதேச மக்கள் கலந்து கொண்டனர்.