• Apr 29 2026

மூதூர் - கடற்கரைச் சேனை பாடசாலை வீதி புனரமைப்பு: 30 இலட்சம் ரூபா செலவில் பணிகள் ஆரம்பம்!

Ziya / Apr 29th 2026, 3:40 pm
image

மூதூர் பிரதேச சபைக்கு உட்பட்ட கடற்கரைச் சேனை பகுதியில் உள்ள பாடசாலை வீதியைப் புனரமைக்கும் பணிகள் இன்று (29) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.


2026 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், பி.எஸ்.ரி.ஜி (PSTG) திட்டத்தின் ஊடாக இதற்காக 30 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


மூதூர் பிரதேச சபை தவிசாளர் எஸ். பிரகலாதன் அவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு, வீதி புனரமைப்புப் பணிகளை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.


குறித்த வீதியானது நீண்டகாலமாகப் புனரமைக்கப்படாமல் இருந்த நிலையில், இப்பகுதி மக்களின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


இந்நிகழ்வில் மூதூர் பிரதேச சபையின் செயலாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 


மூதூர் - கடற்கரைச் சேனை பாடசாலை வீதி புனரமைப்பு: 30 இலட்சம் ரூபா செலவில் பணிகள் ஆரம்பம் மூதூர் பிரதேச சபைக்கு உட்பட்ட கடற்கரைச் சேனை பகுதியில் உள்ள பாடசாலை வீதியைப் புனரமைக்கும் பணிகள் இன்று (29) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.2026 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், பி.எஸ்.ரி.ஜி (PSTG) திட்டத்தின் ஊடாக இதற்காக 30 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மூதூர் பிரதேச சபை தவிசாளர் எஸ். பிரகலாதன் அவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு, வீதி புனரமைப்புப் பணிகளை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.குறித்த வீதியானது நீண்டகாலமாகப் புனரமைக்கப்படாமல் இருந்த நிலையில், இப்பகுதி மக்களின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.இந்நிகழ்வில் மூதூர் பிரதேச சபையின் செயலாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

Advertisement

Advertisement

Advertisement