• Apr 12 2026

சீரற்ற காலநிலையால் பெரும் பாதிப்புக்குள்ளான மூதூர் !

Ziya / Nov 29th 2025, 2:49 pm
image

சீரற்ற காலநிலை காரணமாக மூதூர் பிரதேச செயலக பிரிவும் பாதிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் மூதூர் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள இரால்குழி,ஷாபிநகர் கிராம உத்தியோகத்தர்கள் பிரிவைச் சேர்ந்த சில குடும்பங்கள் இடம்பெயர்ந்து இரண்டு இடைத்தங்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் .

மூதூர் -அந்நகார் மகளீர் கல்லூரியில் இரால்குழி கிராம உத்தியோகத்தர் பிரிவை சேர்ந்த 47 குடும்பங்களைச் சேர்ந்த 116 பேரும், மூதூர் அல்ஹிதாயா மகா வித்தியாலயத்தில் ஷாபிநகர் கிராம உத்தியோகத்தர் பிரிவின் -வேதத்தீவு கிராமத்தைச் சேர்ந்த 6 குடும்பங்களைச் சேர்ந்த 26 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மூதூரில் உள்ள பல வீடுகள் நீரிழ் மூழ்கிக் காணப்படுகின்றன.

மூதூர் சிங்கள மகா வித்தியாலய வளாகத்தினுள் வெள்ளநீர் நிரம்பிக் காணப்படுகிறது.

மூதூர் -சம்பூர் பிரதான வீதியின் புளியடி சந்தியில் வெள்ளநீர் ஊடறுத்துச் செல்வதால் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் போக்குவரத்து செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

வேதத்தீவு-ஷாபிநகர் போக்குவரத்து தடைபட்டுள்ள நிலையில் கடற்படையினர் படகு மூலம் பொதுமக்களை ஏற்றி இறக்கி வருகின்றனர்.

வயல் நிலங்கள் பலவும் வெள்ள நீரில் மூழ்கிக் காணப்படுகின்றன. 


சீரற்ற காலநிலையால் பெரும் பாதிப்புக்குள்ளான மூதூர் சீரற்ற காலநிலை காரணமாக மூதூர் பிரதேச செயலக பிரிவும் பாதிக்கப்பட்டுள்ளது.அந்த வகையில் மூதூர் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள இரால்குழி,ஷாபிநகர் கிராம உத்தியோகத்தர்கள் பிரிவைச் சேர்ந்த சில குடும்பங்கள் இடம்பெயர்ந்து இரண்டு இடைத்தங்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் .மூதூர் -அந்நகார் மகளீர் கல்லூரியில் இரால்குழி கிராம உத்தியோகத்தர் பிரிவை சேர்ந்த 47 குடும்பங்களைச் சேர்ந்த 116 பேரும், மூதூர் அல்ஹிதாயா மகா வித்தியாலயத்தில் ஷாபிநகர் கிராம உத்தியோகத்தர் பிரிவின் -வேதத்தீவு கிராமத்தைச் சேர்ந்த 6 குடும்பங்களைச் சேர்ந்த 26 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.மூதூரில் உள்ள பல வீடுகள் நீரிழ் மூழ்கிக் காணப்படுகின்றன.மூதூர் சிங்கள மகா வித்தியாலய வளாகத்தினுள் வெள்ளநீர் நிரம்பிக் காணப்படுகிறது.மூதூர் -சம்பூர் பிரதான வீதியின் புளியடி சந்தியில் வெள்ளநீர் ஊடறுத்துச் செல்வதால் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் போக்குவரத்து செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.வேதத்தீவு-ஷாபிநகர் போக்குவரத்து தடைபட்டுள்ள நிலையில் கடற்படையினர் படகு மூலம் பொதுமக்களை ஏற்றி இறக்கி வருகின்றனர்.வயல் நிலங்கள் பலவும் வெள்ள நீரில் மூழ்கிக் காணப்படுகின்றன. 

Advertisement

Advertisement

Advertisement