இரத்தினபுரி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பலத்த மழை பெய்து வருகின்றது பல்வேறு பிரதேசங்களில் மண்சரிவு மற்றும் மரம் முறிந்து விழுந்து வீடுள் சேதங்கள் ஏற்பட்டுள்ளதோடு மின்சாரம் துண்டிப்பு மற்றும் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது.
மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு எதிர்நோக்கி வருகின்றனர் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி காவத்தை பிரதான வீதியில் எல்லேகவத்தை பிரதேசத்தில் மண்மேடுடன் மரம் சரிந்து விழுந்துள்ளது.
இரத்தினபுரியில் பல தாழ்நில பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இரத்தினபுரி , கொடிகமுவ, முஸ்லிம் பள்ளி வீதி ,முத்துவ அங்கமுவ, எலபாத்த, கிரியெல்ல ,திமியாவ, கொடவெல ஆகிய பிரதேசங்களே வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
களுகங்கையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது மற்றும் இறக்குவானை மாதம்பை ஓபடகந்த பிரதேசத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதோடு கற்பாறைகள் சரிந்துள்ளது .
காவத்தை பிரதேச செயலக பிரிவில் எந்தானை கப்பெல பிரதேசத்தில் 02 வீடுகள் சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளன.
இரத்தினபுரி பிரதேச செயலகத்திற்குட்பட்ட சிறிபாகம பொலிஸ் பிரிவில் மரம் முறிந்து விழுந்து 03 வீடுகள் சேதமடைந்துள்ளன.
நிவித்திகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாராவத்தை பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவு அனார்த்தத்தில் 36 குடும்பங்கள் பாராவத்தை வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
காவத்தை எந்தானை தேயிலை தொழிற்சாலைக்கருகில் மண்சரிவு அபாய நிலையில் 08 குடும்பங்களைச் சேர்ந்த 31 பேர் உறவிளர்கள் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ள னர்.
09 ம் இல தோட்ட வீடுகளில் 06 கடும்பங்களை ச் சேர்ந்த 14 பேர் உறவினர்கள் வீட்டில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் .
இதேவேளை, பலாங்கொடை சீதகல பெரகெட்டிய பிதேசத்தில் 103 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர் ஓபநாயக்க உனுவல மற்றும் வல்லகெட்டிய பிரதேசங்களில் மரம் முறிந்து விழுந்ததால் 02 வீடுகள் சேதமடைந்துள்ளன .
வெலிகபொல பிரதேச செயலக பிரிவில் பனான மற்றும் ஹப்புகஸ்தென்ன பிரதேசங்களில் மண்சரிவு அபாயத்தால் 27 பேர் உறவினர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
15 பேர் பிரஜாசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் .பலாங்கொடை ராசகல , எரமிட்டிகல பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள மண்சரிவு அபாயத்தினால் 17 பேர் உறவிளர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளர்.
இதேவேளை மண்சரிவு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள இடங்களில் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு இரத்தினபுரி மாவட்ட இடர் அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தில் மின்சாரம் துண்டிப்பு மற்றும் போக்குவரத்து தடை இரத்தினபுரி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பலத்த மழை பெய்து வருகின்றது பல்வேறு பிரதேசங்களில் மண்சரிவு மற்றும் மரம் முறிந்து விழுந்து வீடுள் சேதங்கள் ஏற்பட்டுள்ளதோடு மின்சாரம் துண்டிப்பு மற்றும் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது. மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு எதிர்நோக்கி வருகின்றனர் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.இரத்தினபுரி காவத்தை பிரதான வீதியில் எல்லேகவத்தை பிரதேசத்தில் மண்மேடுடன் மரம் சரிந்து விழுந்துள்ளது.இரத்தினபுரியில் பல தாழ்நில பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இரத்தினபுரி , கொடிகமுவ, முஸ்லிம் பள்ளி வீதி ,முத்துவ அங்கமுவ, எலபாத்த, கிரியெல்ல ,திமியாவ, கொடவெல ஆகிய பிரதேசங்களே வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. களுகங்கையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது மற்றும் இறக்குவானை மாதம்பை ஓபடகந்த பிரதேசத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதோடு கற்பாறைகள் சரிந்துள்ளது .காவத்தை பிரதேச செயலக பிரிவில் எந்தானை கப்பெல பிரதேசத்தில் 02 வீடுகள் சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளன. இரத்தினபுரி பிரதேச செயலகத்திற்குட்பட்ட சிறிபாகம பொலிஸ் பிரிவில் மரம் முறிந்து விழுந்து 03 வீடுகள் சேதமடைந்துள்ளன. நிவித்திகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாராவத்தை பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவு அனார்த்தத்தில் 36 குடும்பங்கள் பாராவத்தை வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.காவத்தை எந்தானை தேயிலை தொழிற்சாலைக்கருகில் மண்சரிவு அபாய நிலையில் 08 குடும்பங்களைச் சேர்ந்த 31 பேர் உறவிளர்கள் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ள னர்.09 ம் இல தோட்ட வீடுகளில் 06 கடும்பங்களை ச் சேர்ந்த 14 பேர் உறவினர்கள் வீட்டில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் .இதேவேளை, பலாங்கொடை சீதகல பெரகெட்டிய பிதேசத்தில் 103 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர் ஓபநாயக்க உனுவல மற்றும் வல்லகெட்டிய பிரதேசங்களில் மரம் முறிந்து விழுந்ததால் 02 வீடுகள் சேதமடைந்துள்ளன .வெலிகபொல பிரதேச செயலக பிரிவில் பனான மற்றும் ஹப்புகஸ்தென்ன பிரதேசங்களில் மண்சரிவு அபாயத்தால் 27 பேர் உறவினர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.15 பேர் பிரஜாசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் .பலாங்கொடை ராசகல , எரமிட்டிகல பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள மண்சரிவு அபாயத்தினால் 17 பேர் உறவிளர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளர்.இதேவேளை மண்சரிவு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள இடங்களில் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு இரத்தினபுரி மாவட்ட இடர் அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.