மூதூர் -சீதனவெளி கிராம மக்கள் தமது கிராமத்திற்கான சுத்தமான குடிநீர் வசதியை ஏற்படுத்தித் தருமாறு வலியுறுத்தி இன்று (11) காலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மூதூர் புளியடி சந்தியிலிருந்து பிரதான வீதியூடாக நடைபவணியாக மூதூர் பிரதேச சபைக்குள் நுழைந்து அங்கு கோசங்களை எழுப்பி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்தோடு, மூதூர் பிரதேச சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தரிடம் மகஜரும் கையளித்தனர்.
அதன் பின் மூதூர் பிரதேச சபையிலிருந்து பிரதேச செயலகம் வரை நடைபவணியாக சென்று பிரதேச செயலக வளாகத்தினுள் நுழைந்து அங்கு தமது கோரிக்கைகளை முன்வைத்து கோசங்களை எழுப்பியிருந்தனர்.
அதேவேளை, கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒரு சிலர், மூதூர் பிரதேச செயலாளரை சந்தித்து கலந்துரையாடியதுடன் மக்களின் கோரிக்கைகள் அடங்கிய மகஜரையும் கையளித்தனர்.
இவ் விடயம் தொடர்பில் உரிய தரப்பினரிடம் பேசி நடவடிக்கை மேற்கொள்வதாக மூதூர் பிரதேச செயலாளர் எம்.பீ.எம்.முபாறக் வாக்குறுதி அளித்ததையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டோர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்டு 2012 இல் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மூதூர் -சீதனவெளி கிராமத்தில் 120 குடும்பங்களை சேர்ந்தோர் வசித்து வருகின்றனர்.
இப் பிரதேசத்தில் இன்றுவரை சுத்தமான குடிநீர் வசதி இல்லை.இந்நிலையிலேயே தமது கோரிக்கைகளை முன்வைத்து சீதனவெளி கிராம மக்கள் இப் போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
சுத்தமான குடிநீர் வசதியை ஏற்படுத்தித் தருமாறு வலியுறுத்தி மூதூர் மக்கள் போராட்டம். மூதூர் -சீதனவெளி கிராம மக்கள் தமது கிராமத்திற்கான சுத்தமான குடிநீர் வசதியை ஏற்படுத்தித் தருமாறு வலியுறுத்தி இன்று (11) காலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.மூதூர் புளியடி சந்தியிலிருந்து பிரதான வீதியூடாக நடைபவணியாக மூதூர் பிரதேச சபைக்குள் நுழைந்து அங்கு கோசங்களை எழுப்பி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அத்தோடு, மூதூர் பிரதேச சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தரிடம் மகஜரும் கையளித்தனர்.அதன் பின் மூதூர் பிரதேச சபையிலிருந்து பிரதேச செயலகம் வரை நடைபவணியாக சென்று பிரதேச செயலக வளாகத்தினுள் நுழைந்து அங்கு தமது கோரிக்கைகளை முன்வைத்து கோசங்களை எழுப்பியிருந்தனர்.அதேவேளை, கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒரு சிலர், மூதூர் பிரதேச செயலாளரை சந்தித்து கலந்துரையாடியதுடன் மக்களின் கோரிக்கைகள் அடங்கிய மகஜரையும் கையளித்தனர்.இவ் விடயம் தொடர்பில் உரிய தரப்பினரிடம் பேசி நடவடிக்கை மேற்கொள்வதாக மூதூர் பிரதேச செயலாளர் எம்.பீ.எம்.முபாறக் வாக்குறுதி அளித்ததையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டோர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.யுத்தத்தால் பாதிக்கப்பட்டு 2012 இல் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மூதூர் -சீதனவெளி கிராமத்தில் 120 குடும்பங்களை சேர்ந்தோர் வசித்து வருகின்றனர்.இப் பிரதேசத்தில் இன்றுவரை சுத்தமான குடிநீர் வசதி இல்லை.இந்நிலையிலேயே தமது கோரிக்கைகளை முன்வைத்து சீதனவெளி கிராம மக்கள் இப் போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.