Mullai Chess Championship 2025 சதுரங்கப் போட்டியானது நேற்றையதினம் (27.09.2025) காலை தொடக்கம் மாலை வரை புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டபத்தில் மஜிக்கல் நைற் செஸ் அக்கடமியின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
இந்த மாபெரும் போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 350 க்கும் மேற்பட்ட வீர, வீராங்கனைகள் பங்கேற்றமை முல்லைத்தீவு மாவட்ட சதுரங்க வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க அடையாளமாக அமைந்துள்ளது.
சமீப காலங்களில் சதுரங்கத்தில் திடீர் வளர்ச்சி அடைந்துவரும் முல்லைத்தீவு மாவட்டத்தில், இப்போட்டியானது முன்னேற்றத்தை மேலும் வலுப்படுத்தும் நிகழ்வாக சிறப்பாக இடம்பெற்றிருந்தது.
குறித்த சதுரங்க போட்டியில் பாடசாலை மாணவ, மாணவிகள் , இளைஞர்கள் , பெற்றோர்கள் என ஆர்வத்துடன் போட்டியில் பங்குபற்றியிருந்தனர்.
போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கான பதக்கங்கள், கேடயங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்ததுடன் பங்குபற்றிய அனைத்து வீர வீராங்கனைகளுக்குமான சான்றிதழ்களும் மஜிக்கல் நைற் செஸ் அக்கடமியினால் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தனர்.
புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் Mullai Chess Championship 2025 போட்டி Mullai Chess Championship 2025 சதுரங்கப் போட்டியானது நேற்றையதினம் (27.09.2025) காலை தொடக்கம் மாலை வரை புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டபத்தில் மஜிக்கல் நைற் செஸ் அக்கடமியின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.இந்த மாபெரும் போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 350 க்கும் மேற்பட்ட வீர, வீராங்கனைகள் பங்கேற்றமை முல்லைத்தீவு மாவட்ட சதுரங்க வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க அடையாளமாக அமைந்துள்ளது.சமீப காலங்களில் சதுரங்கத்தில் திடீர் வளர்ச்சி அடைந்துவரும் முல்லைத்தீவு மாவட்டத்தில், இப்போட்டியானது முன்னேற்றத்தை மேலும் வலுப்படுத்தும் நிகழ்வாக சிறப்பாக இடம்பெற்றிருந்தது.குறித்த சதுரங்க போட்டியில் பாடசாலை மாணவ, மாணவிகள் , இளைஞர்கள் , பெற்றோர்கள் என ஆர்வத்துடன் போட்டியில் பங்குபற்றியிருந்தனர். போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கான பதக்கங்கள், கேடயங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்ததுடன் பங்குபற்றிய அனைத்து வீர வீராங்கனைகளுக்குமான சான்றிதழ்களும் மஜிக்கல் நைற் செஸ் அக்கடமியினால் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தனர்.