முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் காணப்படும் பல வைத்தியசாலைளிலுமுள்ள குறைபாடுகள் தொடர்பிலும், தேவைப்பாடுகள் தொடர்பிலும் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பாராளுமன்றில் முன்வைப்புக்களை செய்ததுடன், குறித்த தேவைப்பாடுகளை உடனடியாக நிறைவேற்றித்தருமாறும் கேட்டுக்கொண்டார்.
குறிப்பாக மருந்துக்கலவையாளர்களின் ஆளணிப்பற்றாக்குறை, வைத்தியாசாலைகளில் காணப்படும் ஆளணிப் பற்றாக்குறைகளைப் பூர்த்திசெய்தல், புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் நிலவும் வைத்திய நிபுணர், ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர் மற்றும் எக்ஸ் கதிர் படப்பிடிப்பாளர்களின் தேவைப்பாடுகள், மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் காணப்படும் வைத்திய நிபுணர் மற்றும், துணை மருத்துவப் பணியாளர் தேவைப்பாடுகள், அளம்பில் பிரதேச வைத்தியசாலைக்கான நோயாளர் காவு வண்டித் தேவைப்பாடுகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தனது முன்வைப்புக்களைச் செய்துள்ளார்.
முல்லைத்தீவு பிராந்திய சுகாதாரசேவைகள் பணிமனையால் முன்வைக்கப்பட்ட தேவைப்பாடுகள் குறித்தே இவ்வாறு முன்வைக்கப்பட்டுள்ளது.
பாரளுமன்றத்தில் நேற்று (18.02.2025) இடம்பெற்ற வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீட்டுவிவாதத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இந்தக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு பிராந்திய சுகாதாரசேவைகள் பிரிவில் காணப்படும் மருந்துக்கலவையாளர்களின் வெற்றிடங்கள் நிரப்பப்படவேண்டும்.
மருந்துக்கலவையாளர்கள் சுகாதார சேவையில் முக்கிய இடம் வகிக்கின்றார்கள். மருந்துவழங்கல், சத்திரசிகிச்சைப் பொருள்கள், மருத்துவப் பொருள்கள் என்பவற்றின் பொருட்பதிவேட்டைப் பேணல், மருந்துக் கையிருப்பைப் பேணல், மருந்துக் களஞ்சியத்தைப் பேணல் என்பன அவர்களின் முக்கிய பணியாகும்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மருந்துக் கலவையாளர் ஆளணி 34 ஆகும். ஆயினும் தற்போது உள்ள மருந்துக்கலவையாளர்களின் எண்ணிக்கை 13 மட்டுமே ஆகும்.
ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக மருந்துக் கலவையாளர்களுக்கான ஆட்சேர்ப்பு பயிற்சி நெறிகள் சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்படவில்லை.
எமது சில மருத்துவமனைகளின் மருந்துக் கலவையாளர்களின் பணியானது மருத்துவ அதிகாரியின் மேற்பார்வையில் வேறு ஊழியர்களாலேயே மேற்கொள்ளப்படுகின்றது. இந்நிலையானது நோயாளர் பாதுகாப்பு மற்றும் தரம் என்பவற்றில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்.
எனவே மருந்துக் கலவையாளர் பயிற்சி நெறியை விரைவாக ஆரம்பித்து ஓர் அணியினரைப் பயிற்றுவித்து வெற்றிடங்களை நிரப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அத்தோடு மருந்துக் கலவையாளர் வெற்றிடங்களுக்கு மருந்தாளர் கொண்டு நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.
வைத்தியசாலைகளின் ஆளணி மீளாய்வுசெய்யப்பட்டு வைத்தியசாலைகளில் காணப்படும் ஆளணிப்பற்றாக்குறைகள் நிரப்பப்படவேண்டிய தேவைகளும் காணப்படுகின்றன.
காலத்துக்குக் காலம் தேவைகளுக்கும் புறநிலை மாற்றங்களுக்கும் அமைவாக சுகாதார சேவையின் ஆளணியினர் விரிவாக்கப்படல் வேண்டும்.
தீர்க்கமான ஓர் ஆளணி விரிவாக்கமானது இறுதியாக 2013 ஆம் ஆண்டு நடைபெற்றது.
கடைசியாக நடைபெற்ற அவ் ஆளணி விரிவாக்கத்தில் கூட தரமுயர்த்தப்பட்ட ஆதார வைத்தியசாலைகள் மற்றும் பிரதேச வைத்தியசாலைகள் என்பவற்றின் ஆளணியினர் அதற்கேற்ற வகையில் விரிவாக்கப்படவில்லை.
குறிப்பாக தரமுயர்த்தப்பட்ட ஆதார மருத்துவமனைகள் இன்னமும் பிரதேச மருத்துவமனைகளின் ஆளணியினருடனேயே இயங்குகின்றது. எனவே தரமுயர்த்தப்பட்ட ஆதார வைத்தியசாலை மட்டத்துக்கான சேவைகளை வழங்க ஆளணிகளை பூர்த்திசெய்துதருமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
இந்தக்குறைபாடு காரணமாக மருத்துவ நிருவாகத்துக்கும் பொதுமக்களுக்குமான முரண் நிலைகள் உருவாகுவதுடன் நோயாளர் பராமரிப்பு சேவை வழங்கலும் பாதிப்படைகின்றது.
ஆளணி விரிவாக்கத்திற்கான தொடக்க முயற்சிகள் தற்போது மேற்கொள்ள ஆரம்பித்துள்ளன.
எனவே ஆளணி விரிவாக்க நடவடிக்கைகளை விரைவாக முழுமைப்படுத்துவதுடன் விரிவாக்கப்பட்ட ஆளணிக்குரிய பணியமர்த்தல்களை விரைவாக மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
ஆளணி விரிவாக்கத்தின் போது, அதற்கான நியமங்களை வடிவமைக்கும் போது, மருத்துவமனைகளின் புவியியல் நிலைகள் மற்றும் உள்ளக அமைவுகள் என்பனவற்றையும் கருத்திற் கொள்ளவேண்டும்.
அதேவேளை புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் வைத்திய நிபுணர், ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர் மற்றும் எக்ஸ் கதிர் படப்பிடிப்பாளர்களின் தேவைப்பாடுகள் காணப்படுகின்றன.
புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையானது கேந்திர முக்கியத்துவமான இடத்தில் அமைந்துள்ளதுடன் இம்மாவட்டத்தின் மூன்றில் ஒரு பங்கு சனத்தொகைக்கான சேவைகளை வழங்கி வருகின்றது.
ஆயினும் இம்மருத்துவமனையில் மருத்துவ நிபுணர்களின் சேவைகள் மற்றும் முக்கிய துணை மருத்துவப் பணிகளான மருத்துவ ஆய்வுகூட தொழினுட்பவியலாளர் மற்றும் எக்சு கதிர் படப்பிடிப்பாளர் ஆகியோர் இல்லாத நிலையே உள்ளது.
எனவே பொது வைத்திய நிபுணர் ஒருவரை விரைவாக நியமிக்க நடவடிக்கை எடுப்பதுடன், மருத்துவ ஆய்வுகூட தொழினுட்பவியலாளர், எக்சு கதிர் படப்பிடிப்பாளர் ஆகியோரை விரைவாக நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகின்றேன்.
இந் நிலையில் மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் வைத்திய நிபுணர் மற்றும், துணை மருத்துவப் பணியாளர் தேவைப்பாடுகள் காணப்படுகின்றன.
மாங்குளம் ஆதார மருத்துவமனையானது ஓர் (A)தரத்திலான ஆதார மருத்துவமனையாகும். மாகாணத்திற்குரிய புணர்வாழ்வு மருத்துவ அலகினையும் இது கொண்டுள்ளது.
ஏ9 நெடுஞ்சாலையில் கேந்திர முக்கியமான இடத்தில் இது அமைந்துள்ளதால் இம் மருத்துவமனை முக்கியத்துவம் பெறுகின்றது. அண்மைய நெதர்லாந்து அரசின் VAMED செயற்றிட்டத்தின் மூலம் இதன் சேவைப்பரப்பு இன்னும் கணிசமாக விரிவடைந்து நோயாளர் சேவை இடம்பெறுகின்றது.
ஓர் (A)தரத்திலான ஆதார மருத்துவமனையாக இருப்பதால், அனைத்து முக்கிய மருத்துவ நிபுணத்துவ சேவைப்பிரிவுகளும், துணை மருத்தவ சேவைகளும் இங்கு அமைதல் வேண்டும்.
ஆனால் இந்த ஆதார மருத்துவமனையானது மகப்பேற்று மருத்துவர், குழந்தைகள் சிகிச்சை நிபுணர், மூட்டு வாத சிகிச்சை நிபுணர் மற்றும் முக்கிய துணை மருத்துவப் பணிகளான இயன்மருத்துவ சிகிச்சையாளர், மற்றும் X கதிர் படப்பிடிப்பாளர் சேவை என்பன இல்லாத நிலையிலேயே தற்போது இயங்கி வருகின்றது.
எனவே மகப்பேற்று மருத்துவர், குழந்தைகள் சிகிச்சை நிபுணர், மூட்டுவாத சிகிச்சை நிபுணர் ஆகியோரின் நியமனத்தை விரைவாக மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
அத்தோடு முக்கிய துணை மருத்துவப் பணிகளான இயன் மருத்துவ சிகிச்சையாளர், Xகதிர் படப்பிடிப்பாளர் ஆகியோரின் நியமனத்துக்கு விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
மேலும் அளம்பில் பிரதேச வைத்தியசாலைக்கான நோயாளர் காவு வண்டி மற்றும் மணலாறு சுகாதார வைத்திய அதிகாரிக்கான வாகன தேவைப்பாடுளும் காணப்படுகின்றன.
அளம்பில் பிரதேச மருத்துவமனை ஒரு நோயாளர் காவுவண்டி இல்லாமலேயே இயங்கி வருகின்றது. இது முல்லைத்தீவில் இருந்து 20 கிலோமீற்றர் தொலைவில் உள்ளது.
இம்மருத்துவமனைக்கான நோயாளர் காவுவண்டிச் சேவைகள் இதர மருத்துவமனைகளான கொக்கிளார் பிரதேச மருத்துவமனை (22கி.மீ.), சம்பத்துநவர பிரதேச மருத்துவமனை (35 கி.மீ.) மூலமாகவே மேற்கொள்ளப்படுகின்றது.
மேலும் அளம்பில் மற்றும் மணலாறு ஆகிய இரண்டு சேவைஇடங்களும் மிகக்குறைவான பொதுப் போக்குவரத்து வசதிகளைக் கொண்ட இடங்களாகும்.
ஆகவே அளம்பில் பிரதேச மருத்துவமனைக்குரிய நோயாளர் காவு வண்டி ஒன்றை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் - என்றார்.
முல்லை மாவட்ட சுகாதாரத்துறை தேவைகளைப் பூர்த்திசெய்க; ரவிகரன் எம்.பி கோரிக்கை முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் காணப்படும் பல வைத்தியசாலைளிலுமுள்ள குறைபாடுகள் தொடர்பிலும், தேவைப்பாடுகள் தொடர்பிலும் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பாராளுமன்றில் முன்வைப்புக்களை செய்ததுடன், குறித்த தேவைப்பாடுகளை உடனடியாக நிறைவேற்றித்தருமாறும் கேட்டுக்கொண்டார். குறிப்பாக மருந்துக்கலவையாளர்களின் ஆளணிப்பற்றாக்குறை, வைத்தியாசாலைகளில் காணப்படும் ஆளணிப் பற்றாக்குறைகளைப் பூர்த்திசெய்தல், புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் நிலவும் வைத்திய நிபுணர், ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர் மற்றும் எக்ஸ் கதிர் படப்பிடிப்பாளர்களின் தேவைப்பாடுகள், மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் காணப்படும் வைத்திய நிபுணர் மற்றும், துணை மருத்துவப் பணியாளர் தேவைப்பாடுகள், அளம்பில் பிரதேச வைத்தியசாலைக்கான நோயாளர் காவு வண்டித் தேவைப்பாடுகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தனது முன்வைப்புக்களைச் செய்துள்ளார். முல்லைத்தீவு பிராந்திய சுகாதாரசேவைகள் பணிமனையால் முன்வைக்கப்பட்ட தேவைப்பாடுகள் குறித்தே இவ்வாறு முன்வைக்கப்பட்டுள்ளது. பாரளுமன்றத்தில் நேற்று (18.02.2025) இடம்பெற்ற வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீட்டுவிவாதத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இந்தக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், முல்லைத்தீவு பிராந்திய சுகாதாரசேவைகள் பிரிவில் காணப்படும் மருந்துக்கலவையாளர்களின் வெற்றிடங்கள் நிரப்பப்படவேண்டும். மருந்துக்கலவையாளர்கள் சுகாதார சேவையில் முக்கிய இடம் வகிக்கின்றார்கள். மருந்துவழங்கல், சத்திரசிகிச்சைப் பொருள்கள், மருத்துவப் பொருள்கள் என்பவற்றின் பொருட்பதிவேட்டைப் பேணல், மருந்துக் கையிருப்பைப் பேணல், மருந்துக் களஞ்சியத்தைப் பேணல் என்பன அவர்களின் முக்கிய பணியாகும். முல்லைத்தீவு மாவட்டத்தில் மருந்துக் கலவையாளர் ஆளணி 34 ஆகும். ஆயினும் தற்போது உள்ள மருந்துக்கலவையாளர்களின் எண்ணிக்கை 13 மட்டுமே ஆகும். ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக மருந்துக் கலவையாளர்களுக்கான ஆட்சேர்ப்பு பயிற்சி நெறிகள் சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்படவில்லை. எமது சில மருத்துவமனைகளின் மருந்துக் கலவையாளர்களின் பணியானது மருத்துவ அதிகாரியின் மேற்பார்வையில் வேறு ஊழியர்களாலேயே மேற்கொள்ளப்படுகின்றது. இந்நிலையானது நோயாளர் பாதுகாப்பு மற்றும் தரம் என்பவற்றில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே மருந்துக் கலவையாளர் பயிற்சி நெறியை விரைவாக ஆரம்பித்து ஓர் அணியினரைப் பயிற்றுவித்து வெற்றிடங்களை நிரப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.அத்தோடு மருந்துக் கலவையாளர் வெற்றிடங்களுக்கு மருந்தாளர் கொண்டு நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.வைத்தியசாலைகளின் ஆளணி மீளாய்வுசெய்யப்பட்டு வைத்தியசாலைகளில் காணப்படும் ஆளணிப்பற்றாக்குறைகள் நிரப்பப்படவேண்டிய தேவைகளும் காணப்படுகின்றன. காலத்துக்குக் காலம் தேவைகளுக்கும் புறநிலை மாற்றங்களுக்கும் அமைவாக சுகாதார சேவையின் ஆளணியினர் விரிவாக்கப்படல் வேண்டும். தீர்க்கமான ஓர் ஆளணி விரிவாக்கமானது இறுதியாக 2013 ஆம் ஆண்டு நடைபெற்றது. கடைசியாக நடைபெற்ற அவ் ஆளணி விரிவாக்கத்தில் கூட தரமுயர்த்தப்பட்ட ஆதார வைத்தியசாலைகள் மற்றும் பிரதேச வைத்தியசாலைகள் என்பவற்றின் ஆளணியினர் அதற்கேற்ற வகையில் விரிவாக்கப்படவில்லை. குறிப்பாக தரமுயர்த்தப்பட்ட ஆதார மருத்துவமனைகள் இன்னமும் பிரதேச மருத்துவமனைகளின் ஆளணியினருடனேயே இயங்குகின்றது. எனவே தரமுயர்த்தப்பட்ட ஆதார வைத்தியசாலை மட்டத்துக்கான சேவைகளை வழங்க ஆளணிகளை பூர்த்திசெய்துதருமாறு கேட்டுக்கொள்கின்றேன். இந்தக்குறைபாடு காரணமாக மருத்துவ நிருவாகத்துக்கும் பொதுமக்களுக்குமான முரண் நிலைகள் உருவாகுவதுடன் நோயாளர் பராமரிப்பு சேவை வழங்கலும் பாதிப்படைகின்றது. ஆளணி விரிவாக்கத்திற்கான தொடக்க முயற்சிகள் தற்போது மேற்கொள்ள ஆரம்பித்துள்ளன. எனவே ஆளணி விரிவாக்க நடவடிக்கைகளை விரைவாக முழுமைப்படுத்துவதுடன் விரிவாக்கப்பட்ட ஆளணிக்குரிய பணியமர்த்தல்களை விரைவாக மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன். ஆளணி விரிவாக்கத்தின் போது, அதற்கான நியமங்களை வடிவமைக்கும் போது, மருத்துவமனைகளின் புவியியல் நிலைகள் மற்றும் உள்ளக அமைவுகள் என்பனவற்றையும் கருத்திற் கொள்ளவேண்டும். அதேவேளை புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் வைத்திய நிபுணர், ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர் மற்றும் எக்ஸ் கதிர் படப்பிடிப்பாளர்களின் தேவைப்பாடுகள் காணப்படுகின்றன. புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையானது கேந்திர முக்கியத்துவமான இடத்தில் அமைந்துள்ளதுடன் இம்மாவட்டத்தின் மூன்றில் ஒரு பங்கு சனத்தொகைக்கான சேவைகளை வழங்கி வருகின்றது. ஆயினும் இம்மருத்துவமனையில் மருத்துவ நிபுணர்களின் சேவைகள் மற்றும் முக்கிய துணை மருத்துவப் பணிகளான மருத்துவ ஆய்வுகூட தொழினுட்பவியலாளர் மற்றும் எக்சு கதிர் படப்பிடிப்பாளர் ஆகியோர் இல்லாத நிலையே உள்ளது. எனவே பொது வைத்திய நிபுணர் ஒருவரை விரைவாக நியமிக்க நடவடிக்கை எடுப்பதுடன், மருத்துவ ஆய்வுகூட தொழினுட்பவியலாளர், எக்சு கதிர் படப்பிடிப்பாளர் ஆகியோரை விரைவாக நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகின்றேன்.இந் நிலையில் மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் வைத்திய நிபுணர் மற்றும், துணை மருத்துவப் பணியாளர் தேவைப்பாடுகள் காணப்படுகின்றன. மாங்குளம் ஆதார மருத்துவமனையானது ஓர் (A)தரத்திலான ஆதார மருத்துவமனையாகும். மாகாணத்திற்குரிய புணர்வாழ்வு மருத்துவ அலகினையும் இது கொண்டுள்ளது. ஏ9 நெடுஞ்சாலையில் கேந்திர முக்கியமான இடத்தில் இது அமைந்துள்ளதால் இம் மருத்துவமனை முக்கியத்துவம் பெறுகின்றது. அண்மைய நெதர்லாந்து அரசின் VAMED செயற்றிட்டத்தின் மூலம் இதன் சேவைப்பரப்பு இன்னும் கணிசமாக விரிவடைந்து நோயாளர் சேவை இடம்பெறுகின்றது. ஓர் (A)தரத்திலான ஆதார மருத்துவமனையாக இருப்பதால், அனைத்து முக்கிய மருத்துவ நிபுணத்துவ சேவைப்பிரிவுகளும், துணை மருத்தவ சேவைகளும் இங்கு அமைதல் வேண்டும். ஆனால் இந்த ஆதார மருத்துவமனையானது மகப்பேற்று மருத்துவர், குழந்தைகள் சிகிச்சை நிபுணர், மூட்டு வாத சிகிச்சை நிபுணர் மற்றும் முக்கிய துணை மருத்துவப் பணிகளான இயன்மருத்துவ சிகிச்சையாளர், மற்றும் X கதிர் படப்பிடிப்பாளர் சேவை என்பன இல்லாத நிலையிலேயே தற்போது இயங்கி வருகின்றது. எனவே மகப்பேற்று மருத்துவர், குழந்தைகள் சிகிச்சை நிபுணர், மூட்டுவாத சிகிச்சை நிபுணர் ஆகியோரின் நியமனத்தை விரைவாக மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன். அத்தோடு முக்கிய துணை மருத்துவப் பணிகளான இயன் மருத்துவ சிகிச்சையாளர், Xகதிர் படப்பிடிப்பாளர் ஆகியோரின் நியமனத்துக்கு விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.மேலும் அளம்பில் பிரதேச வைத்தியசாலைக்கான நோயாளர் காவு வண்டி மற்றும் மணலாறு சுகாதார வைத்திய அதிகாரிக்கான வாகன தேவைப்பாடுளும் காணப்படுகின்றன. அளம்பில் பிரதேச மருத்துவமனை ஒரு நோயாளர் காவுவண்டி இல்லாமலேயே இயங்கி வருகின்றது. இது முல்லைத்தீவில் இருந்து 20 கிலோமீற்றர் தொலைவில் உள்ளது. இம்மருத்துவமனைக்கான நோயாளர் காவுவண்டிச் சேவைகள் இதர மருத்துவமனைகளான கொக்கிளார் பிரதேச மருத்துவமனை (22கி.மீ.), சம்பத்துநவர பிரதேச மருத்துவமனை (35 கி.மீ.) மூலமாகவே மேற்கொள்ளப்படுகின்றது. மேலும் அளம்பில் மற்றும் மணலாறு ஆகிய இரண்டு சேவைஇடங்களும் மிகக்குறைவான பொதுப் போக்குவரத்து வசதிகளைக் கொண்ட இடங்களாகும். ஆகவே அளம்பில் பிரதேச மருத்துவமனைக்குரிய நோயாளர் காவு வண்டி ஒன்றை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் - என்றார்.