• Apr 20 2025

உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற முல்லைத்தீவு - தேவிபுரம் நினைவேந்தல்!

Tamil nila / Nov 27th 2024, 10:01 pm
image

முல்லைத்தீவு - தேவிபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் இடைவிடாத கொட்டும் மழையிலும் மாவீரர்நாள் நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் மேற்கொள்ளப்பட்டது.


சரியாக மாலை 06.05மணிக்கு மணி ஓசை எழுப்பப்பட்டு, தொடர்ந்து அகவணக்கம் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து மாவீரர்களுக்கான பிரதான பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.


அந்தவகையில் பிரதான பொதுச்சுடரினை ஒரு மாவீரரின் தந்தை சிறீதரன் அவர்களால் ப ஏற்றப்பட்டது. அத்தோடு சமநேரத்தில் ஏனைய சுடர்களும் ஏற்றப்பட்டதுடன், மாவீரர்களின் உறவுகள் கண்ணீர்சொரிந்து உணர்வெழுச்சியுடன் நினைவேந்தலை மேற்கொண்டனர்.


மேலும் குறித்த தேவிபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர்களின் உறவுகள், பொதுமக்கள் , முன்னாள் போராளிகள் உணர்வெழுச்சியுடன் மாவீரர்நாள் நினைவேந்தலினை மேற்கொண்டிருந்தனர்.


உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற முல்லைத்தீவு - தேவிபுரம் நினைவேந்தல் முல்லைத்தீவு - தேவிபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் இடைவிடாத கொட்டும் மழையிலும் மாவீரர்நாள் நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் மேற்கொள்ளப்பட்டது.சரியாக மாலை 06.05மணிக்கு மணி ஓசை எழுப்பப்பட்டு, தொடர்ந்து அகவணக்கம் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து மாவீரர்களுக்கான பிரதான பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.அந்தவகையில் பிரதான பொதுச்சுடரினை ஒரு மாவீரரின் தந்தை சிறீதரன் அவர்களால் ப ஏற்றப்பட்டது. அத்தோடு சமநேரத்தில் ஏனைய சுடர்களும் ஏற்றப்பட்டதுடன், மாவீரர்களின் உறவுகள் கண்ணீர்சொரிந்து உணர்வெழுச்சியுடன் நினைவேந்தலை மேற்கொண்டனர்.மேலும் குறித்த தேவிபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர்களின் உறவுகள், பொதுமக்கள் , முன்னாள் போராளிகள் உணர்வெழுச்சியுடன் மாவீரர்நாள் நினைவேந்தலினை மேற்கொண்டிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement