தமிழர்களின் விடிவிற்காய் போராடிய மாவீரர்களின் கனவு பலிக்குமெனவும், தமிழர்களுக்கான விடிவு கிடைத்தே தீரும் எனவும் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
வடகிழக்குத் தாயகப் பகுதியெங்கும் கன மழையால் மிகப் பாரிய அனர்த்தப் பாதிப்புக்கள் ஏற்பட்டபோதும் எமது உறவுகள் மாவீரர் துயிலுமில்லங்களுக்குத் திரண்டு வந்து, எமது மாவீரச் செல்வங்களுக்கு அஞ்சலி செலுத்தியிருப்பதன் மூலம் அதனை உறுதிசெய்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
முல்லைத்தீவு - அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
தமிழ் மக்களின் விடிவிற்காக போராடிய எமது மாவீரர்களுக்காக வடக்கு கிழக்குத் தாயகப் பகுதிகளெங்கும் எமது தமிழ் மக்கள் உணர்வெழுச்சியுடன் தமது அஞ்சலியைச் செலுத்தியிருக்கின்றார்கள்.
எவ்வளவு அடைமழை கொட்டித் தீர்த்தபோதும், பாரிய காற்று, வெள்ள அர்த்தங்கள் ஏற்பட்டபோதும் எமது மாவீரச் செல்வங்களுக்காக எமது உறவுகள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தியிருக்கின்றார்கள்.
இதன் மூலம் எமது மக்களின், எழுச்சியை, அவர்களது எண்ணங்களை நன்கு புரிந்துகொள்ளமுடிகின்றது. எமது மாவீரர்களின் கனவு பலிக்கும் தமிழர்களுக்கான விடிவு கிடைக்கும் - என்றார்.
மாவீரர்களின் கனவு பலிக்கும்- தமிழர்களுக்கான விடிவு கிடைத்தே தீரும் - ரவிகரன் எம்.பி தமிழர்களின் விடிவிற்காய் போராடிய மாவீரர்களின் கனவு பலிக்குமெனவும், தமிழர்களுக்கான விடிவு கிடைத்தே தீரும் எனவும் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.வடகிழக்குத் தாயகப் பகுதியெங்கும் கன மழையால் மிகப் பாரிய அனர்த்தப் பாதிப்புக்கள் ஏற்பட்டபோதும் எமது உறவுகள் மாவீரர் துயிலுமில்லங்களுக்குத் திரண்டு வந்து, எமது மாவீரச் செல்வங்களுக்கு அஞ்சலி செலுத்தியிருப்பதன் மூலம் அதனை உறுதிசெய்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.முல்லைத்தீவு - அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தமிழ் மக்களின் விடிவிற்காக போராடிய எமது மாவீரர்களுக்காக வடக்கு கிழக்குத் தாயகப் பகுதிகளெங்கும் எமது தமிழ் மக்கள் உணர்வெழுச்சியுடன் தமது அஞ்சலியைச் செலுத்தியிருக்கின்றார்கள்.எவ்வளவு அடைமழை கொட்டித் தீர்த்தபோதும், பாரிய காற்று, வெள்ள அர்த்தங்கள் ஏற்பட்டபோதும் எமது மாவீரச் செல்வங்களுக்காக எமது உறவுகள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தியிருக்கின்றார்கள்.இதன் மூலம் எமது மக்களின், எழுச்சியை, அவர்களது எண்ணங்களை நன்கு புரிந்துகொள்ளமுடிகின்றது. எமது மாவீரர்களின் கனவு பலிக்கும் தமிழர்களுக்கான விடிவு கிடைக்கும் - என்றார்.