• Oct 18 2024

முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரியாக றிபாஸ் மௌலவி நியமனம்...!

Sharmi / May 14th 2024, 8:32 am
image

Advertisement

முல்லைத்தீவு - ஹிஜ்ராபுரத்தைச் சேர்ந்த  மௌலவி லெப்பை தம்பி றிபாஸ், கரைதுறைப்பற்று பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

நீதி, மற்றும் சிறைச்சாலைகள், அரசியல் மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ நேற்று (13) இவருக்கான நியமனக் கடிதத்தை கையளித்தார்.

நீதி, மற்றும் சிறைச்சாலைகள், அரசியல் மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ அவர்களின் முஸ்லிம் விவகாரங்களுக்கான இணைப்பாளரும் , வவுனியா சிறைச்சாலை மேற்பார்வையாளர்குழு  தலைவருமான சிறாஜுதீ்ன் நிப்றாஸ் முஹம்மதின் விஷேட சிபாரிசுக்கு அமைய இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

நீண்ட கால வரலாற்றைக் கொண்ட முல்லைத்தீவு மாவட்டத்தில், முஸ்லிம் ஒருவருக்கு திடீர் மரண விசாரணை அதிகாரி நியமனம் வழங்கப்பட்டுள்ளது இதுவே முதல் சந்தர்ப்பமாகும்.

அகில இலங்கை சமாதான நீதவானான இவர், முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம் விவாக பதிவாளராகவும் தற்போது கடமையாற்றி வருகின்றார்.

புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரியின் பழைய மாணவரான மௌலவி லெப்பை தம்பி றிபாஸ் காஸமிய்யாவின் பழைய மாணவர் அமைப்பான "சில்சிலா" வின் நிறைவேற்றுக் குழு உறுப்பினருமாவார்.

அத்துடன், சமூக சேவைகளை முன்னெடுக்கும் சில அமைப்புக்களுடன் இணைந்து தொண்டராக பல சமூக சேவைகளில் ஈடுபட்டு வரும் இவர்,  முல்லைத்தீவு - ஹிஜ்ராபுரம் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றிவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரியாக றிபாஸ் மௌலவி நியமனம். முல்லைத்தீவு - ஹிஜ்ராபுரத்தைச் சேர்ந்த  மௌலவி லெப்பை தம்பி றிபாஸ், கரைதுறைப்பற்று பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.நீதி, மற்றும் சிறைச்சாலைகள், அரசியல் மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ நேற்று (13) இவருக்கான நியமனக் கடிதத்தை கையளித்தார்.நீதி, மற்றும் சிறைச்சாலைகள், அரசியல் மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ அவர்களின் முஸ்லிம் விவகாரங்களுக்கான இணைப்பாளரும் , வவுனியா சிறைச்சாலை மேற்பார்வையாளர்குழு  தலைவருமான சிறாஜுதீ்ன் நிப்றாஸ் முஹம்மதின் விஷேட சிபாரிசுக்கு அமைய இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.நீண்ட கால வரலாற்றைக் கொண்ட முல்லைத்தீவு மாவட்டத்தில், முஸ்லிம் ஒருவருக்கு திடீர் மரண விசாரணை அதிகாரி நியமனம் வழங்கப்பட்டுள்ளது இதுவே முதல் சந்தர்ப்பமாகும்.அகில இலங்கை சமாதான நீதவானான இவர், முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம் விவாக பதிவாளராகவும் தற்போது கடமையாற்றி வருகின்றார்.புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரியின் பழைய மாணவரான மௌலவி லெப்பை தம்பி றிபாஸ் காஸமிய்யாவின் பழைய மாணவர் அமைப்பான "சில்சிலா" வின் நிறைவேற்றுக் குழு உறுப்பினருமாவார்.அத்துடன், சமூக சேவைகளை முன்னெடுக்கும் சில அமைப்புக்களுடன் இணைந்து தொண்டராக பல சமூக சேவைகளில் ஈடுபட்டு வரும் இவர்,  முல்லைத்தீவு - ஹிஜ்ராபுரம் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றிவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement