முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளமான முத்துஐயன்கட்டுக்குளத்தின் 2025 ம் ஆண்டுக்கான சிறுபோக கூட்டம் நேற்று (18) முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது
முத்துஐயன்கட்டு நீர்ப்பாசன பொறியியலாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் முல்லைத்தீவு மாவட்டத்தில் நீர்ப்பாசன பொறியியலாளர் உள்ளிட்ட சம்மந்தப்பட்ட திணைக்களங்களின் தலைவர்கள் கிராம அலுவலர்கள் கமக்கார அமைப்பின் பிரதிநிதிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்
முல்லைத்தீவு மாவட்டத்தில் முததுஐயன்கட்டு குளத்தின் கீழ் 4564.5 ஏக்கரில் சிறுபோக செய்கைக்காக தீர்மானிக்கப்பட்ட நிலையில் 3686.5 ஏக்கரில் நெற் செய்கையும் 878 ஏக்கரில் உப உணவுப் பயிர்ச்செய்கை யும் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது
இந்த சிறு போக செய்கைக்கான வாய்க்கால் துப்பரவு நீர் வழங்கல் மற்றும் கால்நடை கட்டுப்பாடு நன்னீர் மீன்பிடி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
முல்லைத்தீவு முததுஐயன்கட்டு குளத்தின் கீழ் 4564.5 ஏக்கரில் சிறுபோக செய்கை முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளமான முத்துஐயன்கட்டுக்குளத்தின் 2025 ம் ஆண்டுக்கான சிறுபோக கூட்டம் நேற்று (18) முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றதுமுத்துஐயன்கட்டு நீர்ப்பாசன பொறியியலாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் முல்லைத்தீவு மாவட்டத்தில் நீர்ப்பாசன பொறியியலாளர் உள்ளிட்ட சம்மந்தப்பட்ட திணைக்களங்களின் தலைவர்கள் கிராம அலுவலர்கள் கமக்கார அமைப்பின் பிரதிநிதிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர் முல்லைத்தீவு மாவட்டத்தில் முததுஐயன்கட்டு குளத்தின் கீழ் 4564.5 ஏக்கரில் சிறுபோக செய்கைக்காக தீர்மானிக்கப்பட்ட நிலையில் 3686.5 ஏக்கரில் நெற் செய்கையும் 878 ஏக்கரில் உப உணவுப் பயிர்ச்செய்கை யும் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதுஇந்த சிறு போக செய்கைக்கான வாய்க்கால் துப்பரவு நீர் வழங்கல் மற்றும் கால்நடை கட்டுப்பாடு நன்னீர் மீன்பிடி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன