முள்ளிவாய்க்கால் மனிதப் பேரவலத்துடன் கூடிய தமிழ் இனப் படுகொலையை நினைவூட்டும் வகையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுகள் மற்றும் நினைவேந்தல் நிகழ்வுகள் என்பன தொடர்ச்சியாக தமிழர் தாயகம் முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அதேவேளை, பல்வேறு தடைகள் மற்றும் அடக்குமுறைகளுக்கு மத்தியில் உணர்வுபூர்வமாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றது.
அந்தவகையில், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஏற்பாட்டில் தொண்டைமனாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் முள்ளிவாய்க்காலில் உயிர் இழந்த உறவுகளின் ஆத்மா சாந்திக்கான விசேட பூஜை வழிபாடுகள் இன்றைய தினம்(17) இடம்பெற்றது.
இந்த விசேட பூஜை வழிபாடுகளில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் S.சுகிர்தன், உடுப்பிட்டித் தொகுதி இளைஞர் அணி செயலாளர் தயாபரன், கோப்பாய் தொகுதி இளைஞர் அணி தலைவர் றேகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து ஆலய முன்றலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சுகிர்தன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், தொண்டைமனாறு இலங்கை தமிழ் அரசுக்கட்சியில் வட்டாரக்கிளை உறுப்பினர்கள் , பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
முறிகண்டி மக்களின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி
முறிகண்டி மக்களின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று(17) காலை இடம்பெற்றது.
முறிகண்டி பகுதியில் அமைந்துள்ள அம்மன் ஆலய முன்றலில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
சுண்டிகுளம் இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு
முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு இன்றைய தினம்(17) கிளிநொச்சி மாவட்டத்தில் சுண்டிகுளம் இளைஞர்கள், ஆட்டோ சங்கத்தினர் மற்றும் வர்த்தக சங்கத்தினர் இணைந்து மே 18 முள்ளிவாய்க்கால் அவலத்தினை நினைவு கூறும்வகையில் உப்புக்கஞ்சி வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு இறந்த உறவுகளுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டு உப்பு கஞ்சி பகிர்ந்து அளிக்கப்பட்டது.
தமிழின படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவாக கவிதைப் போட்டி
தமிழின படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவாக நடாத்தப்படும் மாபெரும் கவிதைப் போட்டியானது இன்று(17) வள்ளிபுனம் றேடியன் வளாகத்தில் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது
தமிழின படுகொலையின் நினைவாக பொதுத்திருவுருவப்படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவித்து மலர் தூவி அகவணக்கம் செலுத்தப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட கவிதைப்போட்டி மிகச் சிறப்பாக இடம்பெற்று வருகிறது
நினைவழியாமல் வீசும் கந்தகக் காற்று, அதற்கு பிறகும் ஒரு பூ பூக்கத்தானே செய்தது, நந்திக்கடலோரம் காயும் நிலா போன்ற தலைப்புகளில் கவிதைகள் சிறப்பாக இடம்பெற்று வருகிறது.
இந்நிகழ்வில் தமிழ்பற்றாளர்கள் போட்டியாளர்கள் பார்வையாளர்கள் சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்
சாவகச்சேரியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு
சாவகச்சேரி நகரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று(17) காலை முன்னெடுக்கப்பட்டது.
தென்மராட்சி நினைவேந்தல் ஏற்பாட்டு குழுவின் ஒழுங்கமைப்பில் சாவகச்சேரி நகர பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்ட விசேட நினைவேந்தல் கூடாரத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
இதன் போது இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கு பொதுச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதோடு முள்ளிவாய்க்கால் கஞ்சியும் பகிர்ந்து அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் தென்மராட்சி நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் செ.மயூரன், தமிழினப்படுகொலை நினைவேந்தல் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் ஞா.கிஷோர், சாவகச்சேரி வணிகர் கழகத்தினர், சாவகச்சேரி முச்சக்கர வண்டி சங்கத்தினர்= தென்மராட்சி தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு
பொலிஸாரின் அச்சுறுத்தல் மற்றும் அடக்குமுறைகளுக்கு மத்தியில் ஐந்தாவது நாளாகவும் மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
இன்றைய தினம் மட்டக்களப்பின் நுழைவாயிலான பிள்ளையாரடியில் முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சி பரிமாறும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம்,சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்,அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர்.
இதன்போது கொக்குவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததுடன் கஞ்சி குடிப்பதற்காக வாகனங்களை நிறுத்தியவர்கள் அங்கிருந்து செல்லுமாறு பொலிஸாரினால் அச்சுறுத்தப்பட்டனர்.
பொலிஸாரின் செயற்பாட்டினை கண்டிக்கும் வகையில் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் பொலிஸாருடன் முரண்பட்டதை காணமுடிந்தது.
இந்நிகழ்வில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி இயக்கத்தின் இணைப்பாளர்களில் ஒருவரான அருட்தந்தை க.ஜெகதாஸ்,மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், ஞா.சிறிநேசன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அருண்தம்பிமுத்து, தமிழரசுக் கட்சியின் மகளிர் அணி செயலாளர் திருமதி ஆர்.ஜெயபிரகாஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது கஞ்சி பரிமாறும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டபோது வீதியின் இரு மருங்கிலும் பொலிஸார் நிறுத்தப்பட்டு வாகனங்களில் வருவோர் கஞ்சி பருகுவதை தடுக்கும் வகையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட போதும் கஞ்சி பரிமாறும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அதனை மக்களும் வந்து பெற்றுச்செல்வதை காணமுடிந்தது.
தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு முன்னெடுப்பு
தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தினால் கந்தர்மடத்தில் அமைத்துள்ள அதன் தலைமைச் செயலகத்துக்கு முன்பாக இன்று (17) முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது.
தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் கஞ்சி பரிமாறுதலின்போது மக்களுக்கு தென்னம்பிள்ளைகளும் வழங்கி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழர் பகுதிகளில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டுவரும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுகள். முள்ளிவாய்க்கால் மனிதப் பேரவலத்துடன் கூடிய தமிழ் இனப் படுகொலையை நினைவூட்டும் வகையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுகள் மற்றும் நினைவேந்தல் நிகழ்வுகள் என்பன தொடர்ச்சியாக தமிழர் தாயகம் முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.அதேவேளை, பல்வேறு தடைகள் மற்றும் அடக்குமுறைகளுக்கு மத்தியில் உணர்வுபூர்வமாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றது.அந்தவகையில், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஏற்பாட்டில் தொண்டைமனாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் முள்ளிவாய்க்காலில் உயிர் இழந்த உறவுகளின் ஆத்மா சாந்திக்கான விசேட பூஜை வழிபாடுகள் இன்றைய தினம்(17) இடம்பெற்றது.இந்த விசேட பூஜை வழிபாடுகளில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் S.சுகிர்தன், உடுப்பிட்டித் தொகுதி இளைஞர் அணி செயலாளர் தயாபரன், கோப்பாய் தொகுதி இளைஞர் அணி தலைவர் றேகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து ஆலய முன்றலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சுகிர்தன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், தொண்டைமனாறு இலங்கை தமிழ் அரசுக்கட்சியில் வட்டாரக்கிளை உறுப்பினர்கள் , பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.முறிகண்டி மக்களின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சிமுறிகண்டி மக்களின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று(17) காலை இடம்பெற்றது.முறிகண்டி பகுதியில் அமைந்துள்ள அம்மன் ஆலய முன்றலில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.சுண்டிகுளம் இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுமுள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு இன்றைய தினம்(17) கிளிநொச்சி மாவட்டத்தில் சுண்டிகுளம் இளைஞர்கள், ஆட்டோ சங்கத்தினர் மற்றும் வர்த்தக சங்கத்தினர் இணைந்து மே 18 முள்ளிவாய்க்கால் அவலத்தினை நினைவு கூறும்வகையில் உப்புக்கஞ்சி வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு இறந்த உறவுகளுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டு உப்பு கஞ்சி பகிர்ந்து அளிக்கப்பட்டது.தமிழின படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவாக கவிதைப் போட்டிதமிழின படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவாக நடாத்தப்படும் மாபெரும் கவிதைப் போட்டியானது இன்று(17) வள்ளிபுனம் றேடியன் வளாகத்தில் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது தமிழின படுகொலையின் நினைவாக பொதுத்திருவுருவப்படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவித்து மலர் தூவி அகவணக்கம் செலுத்தப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட கவிதைப்போட்டி மிகச் சிறப்பாக இடம்பெற்று வருகிறது நினைவழியாமல் வீசும் கந்தகக் காற்று, அதற்கு பிறகும் ஒரு பூ பூக்கத்தானே செய்தது, நந்திக்கடலோரம் காயும் நிலா போன்ற தலைப்புகளில் கவிதைகள் சிறப்பாக இடம்பெற்று வருகிறது.இந்நிகழ்வில் தமிழ்பற்றாளர்கள் போட்டியாளர்கள் பார்வையாளர்கள் சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்சாவகச்சேரியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுசாவகச்சேரி நகரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று(17) காலை முன்னெடுக்கப்பட்டது.தென்மராட்சி நினைவேந்தல் ஏற்பாட்டு குழுவின் ஒழுங்கமைப்பில் சாவகச்சேரி நகர பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்ட விசேட நினைவேந்தல் கூடாரத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.இதன் போது இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கு பொதுச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதோடு முள்ளிவாய்க்கால் கஞ்சியும் பகிர்ந்து அளிக்கப்பட்டது.இந்நிகழ்வில் தென்மராட்சி நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் செ.மயூரன், தமிழினப்படுகொலை நினைவேந்தல் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் ஞா.கிஷோர், சாவகச்சேரி வணிகர் கழகத்தினர், சாவகச்சேரி முச்சக்கர வண்டி சங்கத்தினர்= தென்மராட்சி தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுபொலிஸாரின் அச்சுறுத்தல் மற்றும் அடக்குமுறைகளுக்கு மத்தியில் ஐந்தாவது நாளாகவும் மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.இன்றைய தினம் மட்டக்களப்பின் நுழைவாயிலான பிள்ளையாரடியில் முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சி பரிமாறும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம்,சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்,அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர்.இதன்போது கொக்குவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததுடன் கஞ்சி குடிப்பதற்காக வாகனங்களை நிறுத்தியவர்கள் அங்கிருந்து செல்லுமாறு பொலிஸாரினால் அச்சுறுத்தப்பட்டனர்.பொலிஸாரின் செயற்பாட்டினை கண்டிக்கும் வகையில் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் பொலிஸாருடன் முரண்பட்டதை காணமுடிந்தது.இந்நிகழ்வில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி இயக்கத்தின் இணைப்பாளர்களில் ஒருவரான அருட்தந்தை க.ஜெகதாஸ்,மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், ஞா.சிறிநேசன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அருண்தம்பிமுத்து, தமிழரசுக் கட்சியின் மகளிர் அணி செயலாளர் திருமதி ஆர்.ஜெயபிரகாஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.இதன்போது கஞ்சி பரிமாறும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டபோது வீதியின் இரு மருங்கிலும் பொலிஸார் நிறுத்தப்பட்டு வாகனங்களில் வருவோர் கஞ்சி பருகுவதை தடுக்கும் வகையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட போதும் கஞ்சி பரிமாறும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அதனை மக்களும் வந்து பெற்றுச்செல்வதை காணமுடிந்தது.தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு முன்னெடுப்புதமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தினால் கந்தர்மடத்தில் அமைத்துள்ள அதன் தலைமைச் செயலகத்துக்கு முன்பாக இன்று (17) முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது.தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் கஞ்சி பரிமாறுதலின்போது மக்களுக்கு தென்னம்பிள்ளைகளும் வழங்கி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.