• Nov 25 2024

பாராளுமன்ற உறுப்பினர்களை கொள்வனவு செய்யும் பன்னாட்டு நிறுவனங்கள்- ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு..!

Sharmi / Oct 12th 2024, 11:43 am
image

தென்னிலங்கை வேட்பாளர்கள் ஏற்கனவே வெற்றி பெற்றிருந்தாலும் கூட, தென்னிலங்கையில் ஏற்பட்டிருக்கின்ற ஒரு மாயை தோற்றம், மாயை அலையாக இங்கே உருவெடுத்து இருக்கின்ற நிலையில் அதன் பாதகங்களை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய தேவை எமக்கு இருக்கின்றது. அதற்காகத்தான் நாங்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றோம் என தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்றையதினம்(11) வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

தமிழ் தேசிய அரசியலில் இதுவரை இல்லாதவாறு பன்னாட்டு நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், பாராளுமன்ற உறுப்பினர்களை கொள்வனவு செய்து, பாராளுமன்றத்தில் தங்களுக்கு ஆதரவான தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கான களங்களை திறப்பதற்கு ஆரம்பித்திருக்கின்றன.

அதனை வெளிப்படுத்த வேண்டிய தேவை எமக்குள்ளது. அதன் அடிப்படையிலும் நாங்கள் இந்த தேர்தலில் ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பு என்ற ரீதியில் களம் இறங்கியுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.


பாராளுமன்ற உறுப்பினர்களை கொள்வனவு செய்யும் பன்னாட்டு நிறுவனங்கள்- ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு. தென்னிலங்கை வேட்பாளர்கள் ஏற்கனவே வெற்றி பெற்றிருந்தாலும் கூட, தென்னிலங்கையில் ஏற்பட்டிருக்கின்ற ஒரு மாயை தோற்றம், மாயை அலையாக இங்கே உருவெடுத்து இருக்கின்ற நிலையில் அதன் பாதகங்களை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய தேவை எமக்கு இருக்கின்றது. அதற்காகத்தான் நாங்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றோம் என தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்றையதினம்(11) வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய அரசியலில் இதுவரை இல்லாதவாறு பன்னாட்டு நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், பாராளுமன்ற உறுப்பினர்களை கொள்வனவு செய்து, பாராளுமன்றத்தில் தங்களுக்கு ஆதரவான தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கான களங்களை திறப்பதற்கு ஆரம்பித்திருக்கின்றன.அதனை வெளிப்படுத்த வேண்டிய தேவை எமக்குள்ளது. அதன் அடிப்படையிலும் நாங்கள் இந்த தேர்தலில் ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பு என்ற ரீதியில் களம் இறங்கியுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement