• Jan 15 2025

வீடொன்றின் மீது பல தடவைகள் துப்பாக்கி சூடு! களத்தில் விசேட அதிரடிப் படை; அதிகாலையில் பரபரப்பு

Chithra / Jan 15th 2025, 7:27 am
image

   

களுத்துறை - தொடங்கொடை, வில்பாத பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தொடங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (15) அதிகாலை இத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

வீட்டின் ஜன்னலில் நான்கு முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

சம்பவ இடத்திற்கு விசேட அதிரடிப் படையினர் வரவழைக்கப்பட்டனர்.

களுத்துறை குற்றப் புலனாய்வு அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

மேலதிக விசாரணைகளை தொடங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

வீடொன்றின் மீது பல தடவைகள் துப்பாக்கி சூடு களத்தில் விசேட அதிரடிப் படை; அதிகாலையில் பரபரப்பு    களுத்துறை - தொடங்கொடை, வில்பாத பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தொடங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.இன்று (15) அதிகாலை இத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.வீட்டின் ஜன்னலில் நான்கு முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக  பொலிஸார் தெரிவித்தனர்.துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.சம்பவ இடத்திற்கு விசேட அதிரடிப் படையினர் வரவழைக்கப்பட்டனர்.களுத்துறை குற்றப் புலனாய்வு அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். மேலதிக விசாரணைகளை தொடங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement