• Jan 15 2025

தொடரும் கன மழை - பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை! வெளியேற்றப்பட்ட நூறு குடும்பங்கள்

Chithra / Jan 15th 2025, 7:39 am
image

 

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மி.மீ வரை கடும் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

இதேவேளை, மண்சரிவு தொடர்பான முன்கூட்டியே எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட தேசிய கட்டிட 

ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, பதுளை, கண்டி, குருநாகல், மாத்தளை  நுவரெலியா, ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் இன்று மாலை 4:00 மணி வரை இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை  தண்ணிமுறிப்பு குளத்தின் நீர்மட்டம் உயர்ந்து வருவது மற்றும் நீரின் வரத்து அதிகரித்ததன் காரணமாக, தண்ணிமுறிப்பு குளமானது வான்பாயக்கூடிய சந்தர்ப்பம் காணப்படுவதாக 

முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

தண்ணிமுறிப்பு குளமானது 21 அடி வரை நீரை சேமிக்க கூடியதாக இருக்கின்ற நிலையில் தற்போது 20.10" அடி வரை நீர் மட்டம் உயர்ந்த நிலையிலே இவ் அறிவித்தலை வெளியிட்டுள்ளனர்.

தற்போது பெய்யும் கனமழை காரணமாக தண்ணிமுறிப்பு குளம் வான்பாயக்கூடிய சந்தர்ப்பம் காணப்படுகிறது. 


எனவே குளத்தின் கீழ்பகுதியில் இருக்கின்ற மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்கள்.

மேலும் கல் ஓயா நதி கரை உடைந்து விடும் அபாயம் இருப்பதால், கல் ஓயாவில் உள்ள சுடுவெல்ல கிராமத்தில் இருந்து நூறு குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.

அத்துடன் அம்பாறை டீ.எஸ்.சேனநாயக்க நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 104 அடிகளாக அதிகரித்துள்ளதால் குறிப்பிட்டளவு நீரை வெளியேற்றுவதற்காக ஒரு வான்கதவு நேற்று மாலை  திறந்து விடப்பட்டுள்ளதாக 

அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளா் எம்.சி.எம்.றியாஸ் தெரிவித்தார். 

ஏற்கனவே நீரோடும் பகுதிகளில் நீர் நிரம்பி வழிவதால் பெருமளவு நீரைத் திறந்து விட்டால் வெள்ளப் பாதிப்புகள் அதிகமாக இருக்கும் எனக் கருதி, நீர் மின் உற்பத்தி நிலையத்தை நோக்கியே நீரை  திறந்து விட தீர்மானித்ததாக அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், இந்த நீரும் கல்லோயா நீருடன் கலந்தே கடலை நோக்கிச் செல்லும் என்பதாலும் மழை தொடர்ந்து பெய்வதாலும் தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடனும் முன்னெச்சரிக்கையுடனும் 

செயற்படுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.  

டீ.எஸ்.சேனநாயக்க நீர்த்தேக்கத்தின் ஆகக் கூடிய நீர்மட்டம் 110 அடிகளாக காணப்படுகின்ற நிலையில், நிலையியற் கட்டளையின் படி அம்பாறை அரச அதிபர், நீர்ப்பாசன திணைக்களம், 

அனர்த்த முகாமைத்துவ சேவைகள் திணைக்களம் ஆகியவை இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளன. 


தொடரும் கன மழை - பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை வெளியேற்றப்பட்ட நூறு குடும்பங்கள்  நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மி.மீ வரை கடும் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.இதேவேளை, மண்சரிவு தொடர்பான முன்கூட்டியே எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.அதன்படி, பதுளை, கண்டி, குருநாகல், மாத்தளை  நுவரெலியா, ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் இன்று மாலை 4:00 மணி வரை இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.இதேவேளை  தண்ணிமுறிப்பு குளத்தின் நீர்மட்டம் உயர்ந்து வருவது மற்றும் நீரின் வரத்து அதிகரித்ததன் காரணமாக, தண்ணிமுறிப்பு குளமானது வான்பாயக்கூடிய சந்தர்ப்பம் காணப்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் தெரிவித்துள்ளனர்.தண்ணிமுறிப்பு குளமானது 21 அடி வரை நீரை சேமிக்க கூடியதாக இருக்கின்ற நிலையில் தற்போது 20.10" அடி வரை நீர் மட்டம் உயர்ந்த நிலையிலே இவ் அறிவித்தலை வெளியிட்டுள்ளனர்.தற்போது பெய்யும் கனமழை காரணமாக தண்ணிமுறிப்பு குளம் வான்பாயக்கூடிய சந்தர்ப்பம் காணப்படுகிறது. எனவே குளத்தின் கீழ்பகுதியில் இருக்கின்ற மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்கள்.மேலும் கல் ஓயா நதி கரை உடைந்து விடும் அபாயம் இருப்பதால், கல் ஓயாவில் உள்ள சுடுவெல்ல கிராமத்தில் இருந்து நூறு குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.அத்துடன் அம்பாறை டீ.எஸ்.சேனநாயக்க நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 104 அடிகளாக அதிகரித்துள்ளதால் குறிப்பிட்டளவு நீரை வெளியேற்றுவதற்காக ஒரு வான்கதவு நேற்று மாலை  திறந்து விடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளா் எம்.சி.எம்.றியாஸ் தெரிவித்தார். ஏற்கனவே நீரோடும் பகுதிகளில் நீர் நிரம்பி வழிவதால் பெருமளவு நீரைத் திறந்து விட்டால் வெள்ளப் பாதிப்புகள் அதிகமாக இருக்கும் எனக் கருதி, நீர் மின் உற்பத்தி நிலையத்தை நோக்கியே நீரை  திறந்து விட தீர்மானித்ததாக அவர் குறிப்பிட்டார்.எவ்வாறாயினும், இந்த நீரும் கல்லோயா நீருடன் கலந்தே கடலை நோக்கிச் செல்லும் என்பதாலும் மழை தொடர்ந்து பெய்வதாலும் தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடனும் முன்னெச்சரிக்கையுடனும் செயற்படுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.  டீ.எஸ்.சேனநாயக்க நீர்த்தேக்கத்தின் ஆகக் கூடிய நீர்மட்டம் 110 அடிகளாக காணப்படுகின்ற நிலையில், நிலையியற் கட்டளையின் படி அம்பாறை அரச அதிபர், நீர்ப்பாசன திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ சேவைகள் திணைக்களம் ஆகியவை இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளன. 

Advertisement

Advertisement

Advertisement