• Apr 19 2026

முஸ்லீம் காங்கிரஜிலிருந்து நீக்கியமைக்கு எதிராக மாநகர சபை உறுப்பினர் நீதிமன்றில் மனு!

shanu / Mar 7th 2026, 7:47 pm
image

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டமைக்கு எதிராக, கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் புஹாரி பாத்திமா சொஹாரா தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் 13ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு நேற்று வெள்ளிக்கிழமை பரிசீலிக்கப்பட்டது.


இந்த மனுவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்டோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.


சட்டத்தரணி மஞ்சுள பாலசூரிய ஊடாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில் பின்வரும் விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன:-


"கொழும்பு மாநகர சபையின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் மீதான வாக்கெடுப்பின் போது, அதற்கு ஆதரவாக வாக்களித்த காரணத்தினால் எனது கட்சி உறுப்புரிமை தற்காலிகமாகப் இடைநிறுத்தப்படுவதாகக் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டது.


அதனைத் தொடர்ந்து, ஜனவரி 9ஆம் திகதியிடப்பட்ட கடிதத்தின் ஊடாகக் கட்சி உறுப்புரிமையிலிருந்து நான் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


கட்சியிலிருந்து நீக்கப்பட்டதன் காரணமாக எனது மாநகர சபை உறுப்பினர் பதவியை இழக்க நேரிட்டுள்ளது. எனவே, எனது பதவியைப் பாதுகாக்கும் வகையில் இடைக்காலத் தடையுத்தரவு ஒன்றைப் பிறப்பிக்க வேண்டும்." - என்று மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் புஹாரி பாத்திமா சொஹாரா கோரியுள்ளார்.


இதனையடுத்து, மனுவில் உள்ள விடயங்களை உறுதிப்படுத்துவதற்காக எதிர்வரும் மார்ச் 13ஆம் திகதி அதனை மீண்டும் அழைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முஸ்லீம் காங்கிரஜிலிருந்து நீக்கியமைக்கு எதிராக மாநகர சபை உறுப்பினர் நீதிமன்றில் மனு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டமைக்கு எதிராக, கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் புஹாரி பாத்திமா சொஹாரா தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் 13ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு நேற்று வெள்ளிக்கிழமை பரிசீலிக்கப்பட்டது.இந்த மனுவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்டோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.சட்டத்தரணி மஞ்சுள பாலசூரிய ஊடாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில் பின்வரும் விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன:-"கொழும்பு மாநகர சபையின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் மீதான வாக்கெடுப்பின் போது, அதற்கு ஆதரவாக வாக்களித்த காரணத்தினால் எனது கட்சி உறுப்புரிமை தற்காலிகமாகப் இடைநிறுத்தப்படுவதாகக் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து, ஜனவரி 9ஆம் திகதியிடப்பட்ட கடிதத்தின் ஊடாகக் கட்சி உறுப்புரிமையிலிருந்து நான் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியிலிருந்து நீக்கப்பட்டதன் காரணமாக எனது மாநகர சபை உறுப்பினர் பதவியை இழக்க நேரிட்டுள்ளது. எனவே, எனது பதவியைப் பாதுகாக்கும் வகையில் இடைக்காலத் தடையுத்தரவு ஒன்றைப் பிறப்பிக்க வேண்டும்." - என்று மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் புஹாரி பாத்திமா சொஹாரா கோரியுள்ளார்.இதனையடுத்து, மனுவில் உள்ள விடயங்களை உறுதிப்படுத்துவதற்காக எதிர்வரும் மார்ச் 13ஆம் திகதி அதனை மீண்டும் அழைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement