• Jun 02 2026

கொலையாளிகளும் திருடர்களும் மீண்டும் அரியணை ஏற முடியாது! நாமலின் கருத்துக்கு அமைச்சர் பிமல் பதிலடி

Chithra / Feb 2nd 2026, 8:43 am
image


கொலையாளிகளும், திருடர்களும் மீண்டும் ஆட்சிப்பீடம் ஏற நாட்டு மக்கள் இடமளிக்கமாட்டார்கள் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தி அரசுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ எம்.பி. விடுத்துள்ள எச்சரிக்கை தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே அமைச்சர்  பிமல் ரத்நாயக்க மேற்கண்டவாறு கூறினார்.

இனிமேல் ஜனநாயகத்தின் பக்கமே மக்கள் நிற்பார்கள் என்றும், மக்களின் விருப்பம் மிக உயர்ந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மக்கள் அநீதி செய்பவர்களுக்கு ஒருபோதும் இடம் தரமாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டை அதால பாதாளத்துக்குள் தள்ளியவர்களை மக்கள் மன்னிக்கமாட்டார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

கொலையாளிகளும் திருடர்களும் மீண்டும் அரியணை ஏற முடியாது நாமலின் கருத்துக்கு அமைச்சர் பிமல் பதிலடி கொலையாளிகளும், திருடர்களும் மீண்டும் ஆட்சிப்பீடம் ஏற நாட்டு மக்கள் இடமளிக்கமாட்டார்கள் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.தேசிய மக்கள் சக்தி அரசுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ எம்.பி. விடுத்துள்ள எச்சரிக்கை தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே அமைச்சர்  பிமல் ரத்நாயக்க மேற்கண்டவாறு கூறினார்.இனிமேல் ஜனநாயகத்தின் பக்கமே மக்கள் நிற்பார்கள் என்றும், மக்களின் விருப்பம் மிக உயர்ந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.மக்கள் அநீதி செய்பவர்களுக்கு ஒருபோதும் இடம் தரமாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.நாட்டை அதால பாதாளத்துக்குள் தள்ளியவர்களை மக்கள் மன்னிக்கமாட்டார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement