• Mar 30 2025

கனடாவில் இடம்பெற்ற கொலை சம்பவங்கள்; இரு ஈழத் தமிழர்கள் கைது!

Chithra / Mar 27th 2025, 2:38 pm
image

 

கனடாவின் டொரெண்டோ பகுதியில் கடந்த 6 மற்றும் 8 ஆம் திகதிகளில் இடம்பெற்ற இருவேறு கொலை சம்பவங்கள் தொடர்பில் இரு இலங்கை இளைஞர்கள்  கைது செய்யப்பட்டுள்ளனர். 

மார்கம் நகரைச் சேர்ந்த கோகிலன் பாலமுரளி மற்றும் டொரண்டோவைச் சேர்ந்த பிரன்னன் பாலசேகர் (வயது 24) ஆகியோரே கைது செய்யப்பட்டனர்.

இந்த இருவரும் யாழ்ப்பாணத்தில் இருந்து வேலை வாய்ப்புக்காக கனடாவுக்குச் சென்று அங்கு குடியேறியதாக தெரிவிக்கப்படுகிறது. 

கொலைச் சம்பவத்தின் பின்னர், அப்பகுதியிலுள்ள சிசிடிவி கமரா அமைப்புகளை பொலிஸார் சோதனையிட்டனர். அதன் பின்னர் குறித்த சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். 

தொடர்ந்து சந்தேக நபர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், இந்த இருவரும் கனடாவில் நடந்த மூன்று கொலை சம்பவங்கள் மற்றும்  திருட்டு சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. 

முதலில், அவர்கள் இருவரும் மார்ச் 8 ஆம் திகதி ஒரு கொலை சதியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டனர். 

பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியபோது, அவர்கள்மீது மேலும் மூன்று கொலை சதி குற்றச்சாட்டுகள் மற்றும் இரண்டு சொத்துத் திருட்டு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த வழக்கு ஸ்கார்பரோவில் உள்ள ஒரு பேக்கரி மற்றும் பிக்ரிகில் உள்ள இரண்டு உணவகங்களோடு தொடர்புடையது என குறிப்பிடுகின்றன.

விசாரணைகளின் பின்னர் இருவரையும் ஏப்ரல் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

கனடாவில் இடம்பெற்ற கொலை சம்பவங்கள்; இரு ஈழத் தமிழர்கள் கைது  கனடாவின் டொரெண்டோ பகுதியில் கடந்த 6 மற்றும் 8 ஆம் திகதிகளில் இடம்பெற்ற இருவேறு கொலை சம்பவங்கள் தொடர்பில் இரு இலங்கை இளைஞர்கள்  கைது செய்யப்பட்டுள்ளனர். மார்கம் நகரைச் சேர்ந்த கோகிலன் பாலமுரளி மற்றும் டொரண்டோவைச் சேர்ந்த பிரன்னன் பாலசேகர் (வயது 24) ஆகியோரே கைது செய்யப்பட்டனர்.இந்த இருவரும் யாழ்ப்பாணத்தில் இருந்து வேலை வாய்ப்புக்காக கனடாவுக்குச் சென்று அங்கு குடியேறியதாக தெரிவிக்கப்படுகிறது. கொலைச் சம்பவத்தின் பின்னர், அப்பகுதியிலுள்ள சிசிடிவி கமரா அமைப்புகளை பொலிஸார் சோதனையிட்டனர். அதன் பின்னர் குறித்த சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து சந்தேக நபர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், இந்த இருவரும் கனடாவில் நடந்த மூன்று கொலை சம்பவங்கள் மற்றும்  திருட்டு சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. முதலில், அவர்கள் இருவரும் மார்ச் 8 ஆம் திகதி ஒரு கொலை சதியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டனர். பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியபோது, அவர்கள்மீது மேலும் மூன்று கொலை சதி குற்றச்சாட்டுகள் மற்றும் இரண்டு சொத்துத் திருட்டு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.இந்த வழக்கு ஸ்கார்பரோவில் உள்ள ஒரு பேக்கரி மற்றும் பிக்ரிகில் உள்ள இரண்டு உணவகங்களோடு தொடர்புடையது என குறிப்பிடுகின்றன.விசாரணைகளின் பின்னர் இருவரையும் ஏப்ரல் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement

Advertisement

Advertisement