• Mar 30 2025

மீண்டும் அதிகரித்த நோய் - டெங்கு நுளம்பை கண்டறிய ட்ரோன்

Chithra / Mar 27th 2025, 2:36 pm
image


டெங்கு நுளம்பும் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அடையாளம் காணும் நடவடிக்கை  நுகேகொடையில் இன்று ஆரம்பிக்கப்பட்டது.

சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவும் மேல் மாகாண சபையும் இணைந்து மூன்று நாட்களுக்கு இந்த திட்டத்தை செயல்படுத்துகின்றன.

இந்நிலையில் இன்று முதல் 3 நாட்களுக்கு 8 மாவட்டங்களில் விசேட நுளம்பு ஒழிப்பு திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

அவ்வப்போது பெய்யும் மழை காரணமாக மீண்டும் டெங்கு பரவும் அபாயம் உள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. 

இந்த அவதான நிலைமையைக் கருத்தில் கொண்டு, விசேட நுளம்பு ஒழிப்பு திட்டம் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படும் என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. 

வீடுகள், பாடசாலைகள், பணியிடங்கள், தொழிற்சாலைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பொது இடங்கள் இதன்போது சோதனை செய்யப்படவுள்ளது. 

தங்கள் வளாகங்களுக்குள் நுளம்புகள் பெருகும் இடங்களை அழிக்குமாறு சுகாதார பிரிவினர், பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். 



மீண்டும் அதிகரித்த நோய் - டெங்கு நுளம்பை கண்டறிய ட்ரோன் டெங்கு நுளம்பும் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அடையாளம் காணும் நடவடிக்கை  நுகேகொடையில் இன்று ஆரம்பிக்கப்பட்டது.சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவும் மேல் மாகாண சபையும் இணைந்து மூன்று நாட்களுக்கு இந்த திட்டத்தை செயல்படுத்துகின்றன.இந்நிலையில் இன்று முதல் 3 நாட்களுக்கு 8 மாவட்டங்களில் விசேட நுளம்பு ஒழிப்பு திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அவ்வப்போது பெய்யும் மழை காரணமாக மீண்டும் டெங்கு பரவும் அபாயம் உள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. இந்த அவதான நிலைமையைக் கருத்தில் கொண்டு, விசேட நுளம்பு ஒழிப்பு திட்டம் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படும் என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. வீடுகள், பாடசாலைகள், பணியிடங்கள், தொழிற்சாலைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பொது இடங்கள் இதன்போது சோதனை செய்யப்படவுள்ளது. தங்கள் வளாகங்களுக்குள் நுளம்புகள் பெருகும் இடங்களை அழிக்குமாறு சுகாதார பிரிவினர், பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement