இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட நளினி தனது கணவர் முருகன் இலங்கை தூதரகம் சென்று வர அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
பிரித்தானியா சென்று அங்கு தனது மகளுடன் வாழ கடவுச்சீட்டு பெறுவதற்கான நேர்காணலுக்காக இலங்கை செல்ல கணவர் முருகனை அனுமதிக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முருகன் திருச்சி சிறப்பு முகாமில் உள்ள நிலையில் கடந்த ஜனவரி மாதம் 30ம் திகதி நேர்காணலுக்கு அழைத்து வரப்படவில்லை என நளினி தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தில் தனக்கான நேர்காணல் முடிந்துவிட்ட நிலையில் கணவர் வரவில்லை எனவும் நளினி கூறியுள்ளார்.
முருகனுக்கு கடவுச் சீட்டு வேண்டும். நீதிமன்றை நாடிய நளினி இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட நளினி தனது கணவர் முருகன் இலங்கை தூதரகம் சென்று வர அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். பிரித்தானியா சென்று அங்கு தனது மகளுடன் வாழ கடவுச்சீட்டு பெறுவதற்கான நேர்காணலுக்காக இலங்கை செல்ல கணவர் முருகனை அனுமதிக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.முருகன் திருச்சி சிறப்பு முகாமில் உள்ள நிலையில் கடந்த ஜனவரி மாதம் 30ம் திகதி நேர்காணலுக்கு அழைத்து வரப்படவில்லை என நளினி தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தில் தனக்கான நேர்காணல் முடிந்துவிட்ட நிலையில் கணவர் வரவில்லை எனவும் நளினி கூறியுள்ளார்.