நாடு வங்குரோத்து அடைந்துள்ள நிலையில் 90 இலட்சம் ரூபா செலவில் யாழில் இசைநிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
இன்றைய(12) பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால் யாழ்ப்பாணத்தில் இன்று(12) இரவு இசைக் கச்சேரி ஒன்று நடத்தப்படுகின்றது.
குறித்த இசை நிகழ்விற்காக இந்தியாவிலிருந்து கலைஞர்கள் வருகை தந்துள்ளார்கள்.
இசை நிகழ்விற்காக 90 இலட்சம் ரூபா செலவழிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை ஹட்டனிலும் இவ்வாறான இசைநிகழ்வு இடம்பெறவுள்ளது.
இளைஞர் சேவை மன்றம் என்ற ரீதியில் இவையாக செய்யவேண்டும்.
இவ் இசைநிகழ்விற்கு பணம் ஒதுக்கியது யார்? இதற்காக அமைச்சரவை பத்திரமொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால் நடைமுறைப்படுத்தப்படுவதான இளைஞர் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு மேலதிக ஒதுக்கீடாக 400 மில்லியன் ரூபா பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.இந் நிகழ்வுக்கு எவ்வாறு இவ்வளவு பணத்தொகையை செலவிட முடியும்.
அரச நிறுவனங்களால் பல்வேறு நிகழ்வுகளுக்காக செலவிடும் பணத்தொகையை நிறுத்துமாறு திறைசேரி அமைச்சின் செயலாளரால் சுற்றுநிருபம் வெளியிட்டுள்ளது.
நாங்கள் வங்குரோத்து அடைந்த நாட்டில் தான் இருக்கின்றோம்.
இவ்வாறு இருக்கும் போது வீணாக பணத்தினை செலவிட வேண்டாம். இது இளைஞர்களுக்காக பயன்படுத்த முடியும்.
அதேவேளை, தம்புள்ள சர்வதேச விளையாட்டரங்கிலும் இவ்வாறு இசைக்கச்சேரி இடம்பெற்றது. அதற்கு 88 இலட்சம் செலவிடப்பட்டுள்ளது.
குழியாப்பிட்டியில் 200 மில்லியன் செலவில் இசைக்கச்சேரி இடம்பெற்றது. குறித்த இசைநிகழ்வால் மைதானம் முழுமையாக சேறாக மாறியுள்ளது.
அதேவேளை,வலது குறைந்த நிலையில் உள்ள இராணுவத்திற்கான கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டுள்ளது.
அவர்கள் இந்த நாட்டிற்காக தான் போராடி கை கால்களை இழந்துள்ளார்கள்.
இலட்சக்கணக்கில் மில்லியன் கணக்கில் வீணாக பணத்தை செலவழிக்காது முக்கியமான விடயத்திற்கு இதனை வழங்குமாறு சுசில் பிரேமஜயந்தவிடம் கோரிக்கை விடுப்பதாக அவர் தெரிவித்தார்.
யாழில் 90 இலட்சம் ரூபா செலவில் இடம்பெறவுள்ள இசை நிகழ்வு.சபையில் வசந்த யாப்பா பண்டார அதிருப்தி. நாடு வங்குரோத்து அடைந்துள்ள நிலையில் 90 இலட்சம் ரூபா செலவில் யாழில் இசைநிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.இன்றைய(12) பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால் யாழ்ப்பாணத்தில் இன்று(12) இரவு இசைக் கச்சேரி ஒன்று நடத்தப்படுகின்றது.குறித்த இசை நிகழ்விற்காக இந்தியாவிலிருந்து கலைஞர்கள் வருகை தந்துள்ளார்கள்.இசை நிகழ்விற்காக 90 இலட்சம் ரூபா செலவழிக்கப்பட்டுள்ளது.அதேவேளை ஹட்டனிலும் இவ்வாறான இசைநிகழ்வு இடம்பெறவுள்ளது.இளைஞர் சேவை மன்றம் என்ற ரீதியில் இவையாக செய்யவேண்டும்.இவ் இசைநிகழ்விற்கு பணம் ஒதுக்கியது யார் இதற்காக அமைச்சரவை பத்திரமொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால் நடைமுறைப்படுத்தப்படுவதான இளைஞர் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு மேலதிக ஒதுக்கீடாக 400 மில்லியன் ரூபா பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.இந் நிகழ்வுக்கு எவ்வாறு இவ்வளவு பணத்தொகையை செலவிட முடியும்.அரச நிறுவனங்களால் பல்வேறு நிகழ்வுகளுக்காக செலவிடும் பணத்தொகையை நிறுத்துமாறு திறைசேரி அமைச்சின் செயலாளரால் சுற்றுநிருபம் வெளியிட்டுள்ளது.நாங்கள் வங்குரோத்து அடைந்த நாட்டில் தான் இருக்கின்றோம்.இவ்வாறு இருக்கும் போது வீணாக பணத்தினை செலவிட வேண்டாம். இது இளைஞர்களுக்காக பயன்படுத்த முடியும்.அதேவேளை, தம்புள்ள சர்வதேச விளையாட்டரங்கிலும் இவ்வாறு இசைக்கச்சேரி இடம்பெற்றது. அதற்கு 88 இலட்சம் செலவிடப்பட்டுள்ளது.குழியாப்பிட்டியில் 200 மில்லியன் செலவில் இசைக்கச்சேரி இடம்பெற்றது. குறித்த இசைநிகழ்வால் மைதானம் முழுமையாக சேறாக மாறியுள்ளது.அதேவேளை,வலது குறைந்த நிலையில் உள்ள இராணுவத்திற்கான கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டுள்ளது.அவர்கள் இந்த நாட்டிற்காக தான் போராடி கை கால்களை இழந்துள்ளார்கள்.இலட்சக்கணக்கில் மில்லியன் கணக்கில் வீணாக பணத்தை செலவழிக்காது முக்கியமான விடயத்திற்கு இதனை வழங்குமாறு சுசில் பிரேமஜயந்தவிடம் கோரிக்கை விடுப்பதாக அவர் தெரிவித்தார்.