• Feb 15 2025

உடல்களை அடக்கம் செய்ய 17 ஏக்கரை வழங்கிய முஸ்லிம்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை

Tharmini / Feb 15th 2025, 10:47 am
image

கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில், கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்களை பலவந்தமாக தகனம் செய்வதை தடுத்து, அவற்றை அடக்கம் செய்வதற்கு காணிகளை வழங்கிய கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கு அரசாங்கம் எவ்வித நிவாரணத்தையும் வழங்காமையால், அவர்களுக்கு ஏற்பட்ட அவல நிலையை பிரதேச மக்கள் பிரதிநிதி ஒருவர் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

கொவிட் தொற்றுக்குள்ளானவர்களின் சடலங்களை அடக்கம் செய்யக் கூடாது என நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், சடலங்களை அடக்கம் செய்வதற்காக முஸ்லிம் மக்கள் வழங்கிய 17 ஏக்கர் காணி அந்த மக்கள் அதுவரை விவசாயம் செய்து வந்த காணி என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் சாலி நளீம் தெரிவித்துள்ளார்.

“அதற்கான (கொவிட் உடல்களை புதைப்பதற்கான) இடங்களை அடையாளப்படுத்துகின்ற வேலைத்திட்டங்களை முன்னெடுத்தபோது ஓட்டமாவடி பிரதேசத்தைச் சேர்ந்த மஜ்ஜிமா நகர் மக்கள் முன்வந்து சுமார் 17 ஏக்கர் காணியை வழங்கினர்.

அந்த மக்கள் முஸ்லிம்களுக்கு மாத்திரமல்ல ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் அடக்கம் செய்வதற்கான இடத்தை வழங்கினர்.

அடக்கம் செய்யக்கூடாது என ஏனைய இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் செய்தபோது அந்த மக்கள் இடத்தைக் கொடுத்து உடல்களை அடக்கம் செய்ய அனுமதித்தார்கள்.”

இறுதியாக 2022 ஆம் ஆண்டு மார்ச் 4 ஆம் திகதி ஓட்டமாவடி மயானத்தில் ஒரு சடலம் நல்லடக்கம் செய்யப்பட்டதோடு,  ஒரு வருடத்தில் அங்கு புதைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,634 ஆகும்.

அவர்களில் பெரும்பான்மையானவர்கள் 2,992 முஸ்லிம்கள் என்றாலும், 287 பௌத்தர்களும் அங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஓட்டமாவடி மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டவர்களில் 2,225 ஆண்கள், 1,409 பெண்கள், 270 இந்துக்கள் மற்றும் 85 கிறிஸ்தவர்கள் என சுகாதார அமைச்சின் அப்போதைய ஒருங்கிணைப்புச் செயலாளர் அன்வர் ஹம்தானி வெளியிட்ட உத்தியோகபூர்வ புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளை மீறி கொவிட் தொற்றினால் உயிரிழந்த நோயாளிகளின் சடலங்களை வலுக்கட்டாயமாக எரித்தமை உள்ளிட்ட அரசாங்கத்தின் பாரிய தவறுகளை விசாரிக்க நாடாளுமன்ற விசேட குழுவொன்றை நியமிக்குமாறு கடந்த பெப்ரவரி 07 ஆம் திகதி முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் நாடாளுமன்றத்தில் தனிப்பட்ட பிரேரணையை சமர்ப்பித்திருந்தார்.

இந்த விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் சாலி நளீம், விவசாய நிலங்களை தானமாக வழங்கிய வறிய மக்கள் அரசாங்கம் நிவாரணம் அல்லது மாற்று காணிகள் எதுவும் வழங்காததால் மிகவும் கவலையடைந்துள்ளதாகவும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

“எனினும் அந்த மக்கள் மிகவும் பரிதாபகரமான நிலையில் இருக்கின்றார்கள். ஏனென்றால் அங்கு வாழ்கின்ற ஏழை மக்கள் அன்றாடம் கூலித் தொழில் செய்து தங்களுடைய குடும்பத்தை காப்பாற்றிய மக்கள். ஜனாசாக்கள் அடக்கம் செய்யப்பட்ட நிலங்கள் அவர்கள் மேட்டுநில பயிர்ச்செய்கை செய்த இடங்கள் அது. இன்னமுமே கடந்த அரசாங்கம் முதல் இந்த அரசாங்கம் வரை நிவாரணங்களோ, அந்த காணிக்கான மாற்றுக் காணியோ வழங்கப்படவில்லை. அந்த மக்களுக்கு நிவாரணத்தை வழங்க வேண்டுமென நான் வேண்டுகிறேன்.”

இந்த விவாதத்தில் கலந்து கொண்டு எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், கொவிட் வைரஸின் போது உயிரிழந்தவர்களின் உடல்களை பலவந்தமாக எரித்த அரசாங்கம், உலக வரலாற்றிலும் மனித வரலாற்றிலும் இலங்கையின் அனைத்து கலாச்சாரங்களுக்கும் எதிராக பாரிய குற்றத்தை செய்த குழுவாக வரலாற்றில் இடம்பிடித்துள்ளது என வலியுறுத்தினார்.

மார்ச் 2021 இல், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமர்சனங்களை மீறி ஒரு வருடமாக நடைமுறைப்படுத்தப்பட்ட அனைத்து கொவிட் சடலங்களையும் எரிக்கும் கொள்கையை அரசாங்கம் மாற்றி, மட்டக்களப்பு, ஓட்டமாவடி, மஜ்மா நகரில் முஸ்லிம்கள் நன்கொடையாக வழங்கிய காணியில் மாத்திரம் உடல்களை அடக்கம் செய்தது.

அதன் பின்னர் சரியாக ஒரு வருடத்திற்கு பின்னர் தடை நீக்கப்பட்டது.

2021 பெப்ரவரி ஆரம்பத்தில், கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு எதிராக முதன்முதலில், தமிழ் மக்களால் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் மக்கள் போராட்டமான, பொத்துவிலில் முதல் பொலிகண்டி வரையிலான 700 கிலோமீற்றர் ‘P2P’ பாத யாத்திரையின் போது, முஸ்லிம்களின் ஜனாசாக்கள் பலவந்தமாக தகனம் செய்யப்பட்டமைக்கு எதிராக பலமான எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

சில நாட்களுக்குப் பின்னர், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கைக்கு விஜயம் செய்த பின்னர், காரணம் கூறாமல் ஓட்டமாவடி மயானத்தில் மாத்திரம் கொவிட்டால் பாதிக்கப்பட்ட சடலங்களை அடக்கம் செய்ய அரசாங்கம் அனுமதி வழங்கியது.

உடல்களை அடக்கம் செய்ய 17 ஏக்கரை வழங்கிய முஸ்லிம்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில், கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்களை பலவந்தமாக தகனம் செய்வதை தடுத்து, அவற்றை அடக்கம் செய்வதற்கு காணிகளை வழங்கிய கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கு அரசாங்கம் எவ்வித நிவாரணத்தையும் வழங்காமையால், அவர்களுக்கு ஏற்பட்ட அவல நிலையை பிரதேச மக்கள் பிரதிநிதி ஒருவர் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.கொவிட் தொற்றுக்குள்ளானவர்களின் சடலங்களை அடக்கம் செய்யக் கூடாது என நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், சடலங்களை அடக்கம் செய்வதற்காக முஸ்லிம் மக்கள் வழங்கிய 17 ஏக்கர் காணி அந்த மக்கள் அதுவரை விவசாயம் செய்து வந்த காணி என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் சாலி நளீம் தெரிவித்துள்ளார்.“அதற்கான (கொவிட் உடல்களை புதைப்பதற்கான) இடங்களை அடையாளப்படுத்துகின்ற வேலைத்திட்டங்களை முன்னெடுத்தபோது ஓட்டமாவடி பிரதேசத்தைச் சேர்ந்த மஜ்ஜிமா நகர் மக்கள் முன்வந்து சுமார் 17 ஏக்கர் காணியை வழங்கினர். அந்த மக்கள் முஸ்லிம்களுக்கு மாத்திரமல்ல ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் அடக்கம் செய்வதற்கான இடத்தை வழங்கினர். அடக்கம் செய்யக்கூடாது என ஏனைய இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் செய்தபோது அந்த மக்கள் இடத்தைக் கொடுத்து உடல்களை அடக்கம் செய்ய அனுமதித்தார்கள்.”இறுதியாக 2022 ஆம் ஆண்டு மார்ச் 4 ஆம் திகதி ஓட்டமாவடி மயானத்தில் ஒரு சடலம் நல்லடக்கம் செய்யப்பட்டதோடு,  ஒரு வருடத்தில் அங்கு புதைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,634 ஆகும். அவர்களில் பெரும்பான்மையானவர்கள் 2,992 முஸ்லிம்கள் என்றாலும், 287 பௌத்தர்களும் அங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.ஓட்டமாவடி மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டவர்களில் 2,225 ஆண்கள், 1,409 பெண்கள், 270 இந்துக்கள் மற்றும் 85 கிறிஸ்தவர்கள் என சுகாதார அமைச்சின் அப்போதைய ஒருங்கிணைப்புச் செயலாளர் அன்வர் ஹம்தானி வெளியிட்ட உத்தியோகபூர்வ புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளை மீறி கொவிட் தொற்றினால் உயிரிழந்த நோயாளிகளின் சடலங்களை வலுக்கட்டாயமாக எரித்தமை உள்ளிட்ட அரசாங்கத்தின் பாரிய தவறுகளை விசாரிக்க நாடாளுமன்ற விசேட குழுவொன்றை நியமிக்குமாறு கடந்த பெப்ரவரி 07 ஆம் திகதி முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் நாடாளுமன்றத்தில் தனிப்பட்ட பிரேரணையை சமர்ப்பித்திருந்தார்.இந்த விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் சாலி நளீம், விவசாய நிலங்களை தானமாக வழங்கிய வறிய மக்கள் அரசாங்கம் நிவாரணம் அல்லது மாற்று காணிகள் எதுவும் வழங்காததால் மிகவும் கவலையடைந்துள்ளதாகவும் அவர் மேலும் வலியுறுத்தினார்.“எனினும் அந்த மக்கள் மிகவும் பரிதாபகரமான நிலையில் இருக்கின்றார்கள். ஏனென்றால் அங்கு வாழ்கின்ற ஏழை மக்கள் அன்றாடம் கூலித் தொழில் செய்து தங்களுடைய குடும்பத்தை காப்பாற்றிய மக்கள். ஜனாசாக்கள் அடக்கம் செய்யப்பட்ட நிலங்கள் அவர்கள் மேட்டுநில பயிர்ச்செய்கை செய்த இடங்கள் அது. இன்னமுமே கடந்த அரசாங்கம் முதல் இந்த அரசாங்கம் வரை நிவாரணங்களோ, அந்த காணிக்கான மாற்றுக் காணியோ வழங்கப்படவில்லை. அந்த மக்களுக்கு நிவாரணத்தை வழங்க வேண்டுமென நான் வேண்டுகிறேன்.”இந்த விவாதத்தில் கலந்து கொண்டு எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், கொவிட் வைரஸின் போது உயிரிழந்தவர்களின் உடல்களை பலவந்தமாக எரித்த அரசாங்கம், உலக வரலாற்றிலும் மனித வரலாற்றிலும் இலங்கையின் அனைத்து கலாச்சாரங்களுக்கும் எதிராக பாரிய குற்றத்தை செய்த குழுவாக வரலாற்றில் இடம்பிடித்துள்ளது என வலியுறுத்தினார்.மார்ச் 2021 இல், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமர்சனங்களை மீறி ஒரு வருடமாக நடைமுறைப்படுத்தப்பட்ட அனைத்து கொவிட் சடலங்களையும் எரிக்கும் கொள்கையை அரசாங்கம் மாற்றி, மட்டக்களப்பு, ஓட்டமாவடி, மஜ்மா நகரில் முஸ்லிம்கள் நன்கொடையாக வழங்கிய காணியில் மாத்திரம் உடல்களை அடக்கம் செய்தது.அதன் பின்னர் சரியாக ஒரு வருடத்திற்கு பின்னர் தடை நீக்கப்பட்டது.2021 பெப்ரவரி ஆரம்பத்தில், கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு எதிராக முதன்முதலில், தமிழ் மக்களால் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் மக்கள் போராட்டமான, பொத்துவிலில் முதல் பொலிகண்டி வரையிலான 700 கிலோமீற்றர் ‘P2P’ பாத யாத்திரையின் போது, முஸ்லிம்களின் ஜனாசாக்கள் பலவந்தமாக தகனம் செய்யப்பட்டமைக்கு எதிராக பலமான எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.சில நாட்களுக்குப் பின்னர், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கைக்கு விஜயம் செய்த பின்னர், காரணம் கூறாமல் ஓட்டமாவடி மயானத்தில் மாத்திரம் கொவிட்டால் பாதிக்கப்பட்ட சடலங்களை அடக்கம் செய்ய அரசாங்கம் அனுமதி வழங்கியது.

Advertisement

Advertisement

Advertisement