• Feb 15 2025

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக ஐக்கிய மக்கள் சக்தியின் நேர்முகத் தேர்வு

Tharmini / Feb 15th 2025, 10:39 am
image

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான முதற்கட்ட நேர்முகத் தேர்வு இவ்வார இறுதியில் இடம்பெறவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

அதன்படி, எதிர்வரும் 15 மற்றும் 16ஆம் திகதிகளில் குறித்த நேர்முகத் தேர்வுகள் இடம்பெறவுள்ளன. நாடளாவிய ரீதியில் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் விதத்தில் இந்த நேர்முகத் தேர்வுகள் இடம்பெறும் என பொதுச் செயலாளர் தெரிவித்தார்.

குறைந்தது அந்தந்த மாவட்டங்களில் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய மக்கள் சக்தியின் இரு உறுப்பினர்களாவது நேர்காணல் செய்ய கலந்துக் கொள்வார் என கூறினார். இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியுடன் தொடர்புடைய சிரேஷ்ட சட்டத்தரணிகளும் இதில் கலந்துக்கொள்ளவுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட அதிக கேள்வியிருப்பதாகவும் வெற்றி பெற இயலுமானவர்கள் தேர்தலில் கலந்துக் கொள்வார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தேர்தலில் இளைஞர் பிரதிநிதித்துவம் 25 வீதம் காணப்படும் எனவும் அவர் கூறினார்.

மேலும், குறித்த மாவட்டங்களின் தேசிய அமைப்பாளர்கள் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இது தொடர்பில் அறியப்படுத்தியுள்ளதாக பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக ஐக்கிய மக்கள் சக்தியின் நேர்முகத் தேர்வு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான முதற்கட்ட நேர்முகத் தேர்வு இவ்வார இறுதியில் இடம்பெறவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.அதன்படி, எதிர்வரும் 15 மற்றும் 16ஆம் திகதிகளில் குறித்த நேர்முகத் தேர்வுகள் இடம்பெறவுள்ளன. நாடளாவிய ரீதியில் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் விதத்தில் இந்த நேர்முகத் தேர்வுகள் இடம்பெறும் என பொதுச் செயலாளர் தெரிவித்தார்.குறைந்தது அந்தந்த மாவட்டங்களில் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய மக்கள் சக்தியின் இரு உறுப்பினர்களாவது நேர்காணல் செய்ய கலந்துக் கொள்வார் என கூறினார். இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியுடன் தொடர்புடைய சிரேஷ்ட சட்டத்தரணிகளும் இதில் கலந்துக்கொள்ளவுள்ளனர்.ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட அதிக கேள்வியிருப்பதாகவும் வெற்றி பெற இயலுமானவர்கள் தேர்தலில் கலந்துக் கொள்வார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.தேர்தலில் இளைஞர் பிரதிநிதித்துவம் 25 வீதம் காணப்படும் எனவும் அவர் கூறினார்.மேலும், குறித்த மாவட்டங்களின் தேசிய அமைப்பாளர்கள் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இது தொடர்பில் அறியப்படுத்தியுள்ளதாக பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement