மூதூர் வலயக் கல்விப் பிரிவுக்குட்பட்ட அந்நகார் மகளிர் கல்லூரி மாணவர்களின் நீண்டகாலத் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், புதிய இரு மாடி வகுப்பறை கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (13) கோலாகலமாக நடைபெற்றது.
கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர மற்றும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன ஆகியோர் அடிக்கலை
நாட்டி வைத்தனர்.
கல்லூரி அதிபர் பி.எம். ஏ.மர்சூக் தலைமையில் இந்த வைபவம் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில், கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் எஸ். ஆர். ஹசந்தி ( Hasanthi), மூதூர் வலய கல்விப் பணிப்பாளர் ,எ.எல்.சிராஜ், மூதூர் வலயக்கல்வி அலுவலகப் பிரதி கல்வி பணிப்பாளர்கள் மற்றும் கல்வி அதிகாரிகள், தேசிய மக்கள் சக்தியின் (மூதூர் பிரதேச இணைப்பாளர் எம்.ஆர்.எம். சப்ரான் மற்றும் பிரஜா சக்தி தலைவர்கள் என பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந்த புதிய கட்டிட வசதி மூலம் அல் ஹிக்மா மகா வித்தியாலய மாணவர்களின் கற்றல் சூழல் மேம்படுவதுடன், பிரதேசத்தின் கல்வி வளர்ச்சியில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மூதூர் அந்நகார் மகளிர் கல்லூரி புதிய இரு மாடி கட்டிடம்: ரூ. 14 மில்லியன் செலவில் பணிகள் ஆரம்பம் மூதூர் வலயக் கல்விப் பிரிவுக்குட்பட்ட அந்நகார் மகளிர் கல்லூரி மாணவர்களின் நீண்டகாலத் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், புதிய இரு மாடி வகுப்பறை கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (13) கோலாகலமாக நடைபெற்றது.கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர மற்றும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன ஆகியோர் அடிக்கலை நாட்டி வைத்தனர்.கல்லூரி அதிபர் பி.எம். ஏ.மர்சூக் தலைமையில் இந்த வைபவம் இடம்பெற்றது.இந்த நிகழ்வில், கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் எஸ். ஆர். ஹசந்தி ( Hasanthi), மூதூர் வலய கல்விப் பணிப்பாளர் ,எ.எல்.சிராஜ், மூதூர் வலயக்கல்வி அலுவலகப் பிரதி கல்வி பணிப்பாளர்கள் மற்றும் கல்வி அதிகாரிகள், தேசிய மக்கள் சக்தியின் (மூதூர் பிரதேச இணைப்பாளர் எம்.ஆர்.எம். சப்ரான் மற்றும் பிரஜா சக்தி தலைவர்கள் என பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.இந்த புதிய கட்டிட வசதி மூலம் அல் ஹிக்மா மகா வித்தியாலய மாணவர்களின் கற்றல் சூழல் மேம்படுவதுடன், பிரதேசத்தின் கல்வி வளர்ச்சியில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.