• Nov 07 2025

உரிய சிகிச்சையின்றியே எனது மகள் உயிரிழப்பு; இழப்பைத் தாங்க முடியமால் மருத்துவரை வெட்டிய தந்தை!

shanuja / Oct 9th 2025, 4:08 pm
image

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மகள் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்ததையடுத்து தந்தையொருவர் மருத்துவரை வாளால் வெட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


இந்தச் சம்பவம் கேரளாவின் கோழிக்கோட்டு தாமரசேரி அரச மருத்துவமனையில்  பதிவாகியுள்ளது.


கோழிக்கோட்டு, தாமரசேரி அரச மருத்துவமனையின் மருத்துவர் ஒருவரே இவ்வாறு வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளார்.


9 வயது சிறுமியொருவர்  அமீபா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோழிக்கோட்டு தாமரசேரி அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி குறித்த சிறுமி உயிரிழந்துள்ளார். 


மகளின் இழப்பைத் தாங்க முடியாத தந்தை, மருத்துவர் ஒருவரை  சரமாரியாக வாளால்  வெட்டிக் காயப்படுத்தியுள்ளார்.


வாள்வெட்டுக்கு இலக்காகி காயமடைந்த மருத்துவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சந்தேகநபரான உயிரிழந்த சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டார். 


கைதிற்குப் பின்னர் ஊடகங்களுக்கு குறித்த நபர் தெரிவிக்கையில், மருத்துவர்கள் உரிய முறையில் எனது மகளுக்கு சிகிச்சையளிக்கவில்லை. அதனாலேயே எனது மகள் உயிரிழந்து விட்டாள் எனத் தெரிவித்துள்ளார். 


கைது செய்யப்பட்ட சந்தேகநபரான சிறுமியின் தந்தை தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உரிய சிகிச்சையின்றியே எனது மகள் உயிரிழப்பு; இழப்பைத் தாங்க முடியமால் மருத்துவரை வெட்டிய தந்தை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மகள் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்ததையடுத்து தந்தையொருவர் மருத்துவரை வாளால் வெட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் கேரளாவின் கோழிக்கோட்டு தாமரசேரி அரச மருத்துவமனையில்  பதிவாகியுள்ளது.கோழிக்கோட்டு, தாமரசேரி அரச மருத்துவமனையின் மருத்துவர் ஒருவரே இவ்வாறு வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளார்.9 வயது சிறுமியொருவர்  அமீபா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோழிக்கோட்டு தாமரசேரி அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி குறித்த சிறுமி உயிரிழந்துள்ளார். மகளின் இழப்பைத் தாங்க முடியாத தந்தை, மருத்துவர் ஒருவரை  சரமாரியாக வாளால்  வெட்டிக் காயப்படுத்தியுள்ளார்.வாள்வெட்டுக்கு இலக்காகி காயமடைந்த மருத்துவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சந்தேகநபரான உயிரிழந்த சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டார். கைதிற்குப் பின்னர் ஊடகங்களுக்கு குறித்த நபர் தெரிவிக்கையில், மருத்துவர்கள் உரிய முறையில் எனது மகளுக்கு சிகிச்சையளிக்கவில்லை. அதனாலேயே எனது மகள் உயிரிழந்து விட்டாள் எனத் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரான சிறுமியின் தந்தை தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement