மியன்மார் நாட்டு அகதிகள் பயணித்த படகுகள் என நம்பப்படும் இரண்டு படகுகள் இலங்கையின் இரு வேறு பகுதிகளில் இன்று காலை கரை ஒதுங்கியுள்ளது.
முல்லைத்தீவில் அண்மையில் மியன்மார் நாட்டு அகதிகளுடன் படகு ஒன்று கரை ஒதுங்கியிருந்தது. அந்தப் படகுடன் பயணித்த மேலும் இரண்டு படகுகள் சேதமடைந்தமையால் கடலில் கைவிடப்பட்டன என்று உயிர் தப்பிய மியன்மார் அகதிகள் தெரிவித்திருந்தனர்.
அவ்வாறு பழுதடைந்தபோது கைவிடப்பட்ட இரண்டு படகுகள் எனக் கருதப்படும் படகுகள் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் ஆள்கள் எவரும் இன்றி இன்று கரை ஒதுங்கியுள்ளன.
கரை ஒதுங்கிய படகுகள் தொடர்பில் கடற்படையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வரும் அதேநேரம் இரண்டு படகுகளும் மியன்மார் அகதிகள் பயணித்த படகுகள்தானா அல்லது வேறு படகுகளா எனவும் ஆராய்ந்து வருகின்றனர்.
மட்டக்களப்பில் கரையொதுங்கிய மியன்மார் நாட்டு படகு; அகதிகள் பயணித்த படகுகளா மியன்மார் நாட்டு அகதிகள் பயணித்த படகுகள் என நம்பப்படும் இரண்டு படகுகள் இலங்கையின் இரு வேறு பகுதிகளில் இன்று காலை கரை ஒதுங்கியுள்ளது. முல்லைத்தீவில் அண்மையில் மியன்மார் நாட்டு அகதிகளுடன் படகு ஒன்று கரை ஒதுங்கியிருந்தது. அந்தப் படகுடன் பயணித்த மேலும் இரண்டு படகுகள் சேதமடைந்தமையால் கடலில் கைவிடப்பட்டன என்று உயிர் தப்பிய மியன்மார் அகதிகள் தெரிவித்திருந்தனர்.அவ்வாறு பழுதடைந்தபோது கைவிடப்பட்ட இரண்டு படகுகள் எனக் கருதப்படும் படகுகள் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் ஆள்கள் எவரும் இன்றி இன்று கரை ஒதுங்கியுள்ளன.கரை ஒதுங்கிய படகுகள் தொடர்பில் கடற்படையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வரும் அதேநேரம் இரண்டு படகுகளும் மியன்மார் அகதிகள் பயணித்த படகுகள்தானா அல்லது வேறு படகுகளா எனவும் ஆராய்ந்து வருகின்றனர்.