• Jan 04 2025

கறைபடியாத கரங்களுடன் அரச பணியாளர்கள் மக்களுக்கு சேவை வழங்க தயாராக வேண்டும்; வடக்கு ஆளுநர் வலியுறுத்து..!

Sharmi / Dec 31st 2024, 6:25 pm
image

கறைபடியாத கரங்களுடன் அரசாங்கப் பணியாளர்கள் மக்களுக்கு சேவை வழங்கும் வகையில் எதிர்காலத்தில் தங்களை மாற்றிக்கொள்வதற்குத் தயாராக வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற உலக மண் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நாங்கள் கல்வி கற்கின்ற காலத்தில் இவ்வாறு பல தினங்கள் கடைப்பிடிக்கப்படவில்லை. 

இப்போது ஐ.நாவால் பல தினங்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன. அவ்வாறு ஒரு தினத்தை அறிமுகப்படுத்துவதென்றால் அதன் முக்கியத்தும் அல்லது பயன்பாடு இப்போது தேவைப்படுகின்றது என்பது அர்த்தம்.

இந்த மண்ணை இயற்கை சீரழிக்கவில்லை. மனிதன்தான் சீரழித்துக்கொண்டிருக்கின்றான். 

சகல வளமும் கொண்டது எங்கள் நாடு. அதைப்போல எமது மாகாணமும் சகல வளங்களையும் காலநிலையையும் கொண்டிருக்கின்றது.

அப்படியான எமது மாகாணத்தில் விவசாயிகள் தங்களை இன்னமும் ஏழை விவசாயிகள் என்று விளித்து கூறிக்கொண்டிருக்கின்றனர். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவேண்டும்.

அவர்களுக்கு நவீன முறைமையிலான விவசாயத்தை அறிமுகப்படுத்தவேண்டும். 

அவர்களின் உற்பத்தியையும், அதன் தரத்தையும் ஊக்குவிக்கவேண்டும். அபிவிருத்திகளை முன்னெடுக்கும்போது கண்மூடித்தனமாக எதிர்க்கின்றார்கள்.

அபிவிருத்திகளை முன்னெடுக்கும்போது ஆகக்குறைந்த சூழல் பாதிப்பு இருக்கும். அதை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவுக்கு குறைத்து நாம் செய்யவேண்டும். 

அதைவிடுத்து எல்லாவற்றையும் எதிர்க்கும் மனநிலையில் நோக்கிக் கொண்டிருந்தால் நாம் முன்னேற முடியாது. 

அதிகாரிகளுடன் போராடவேண்டியிருப்பதாக அமைச்சர்களே கூறியிருக்கின்றனர். அது உண்மைதான். பல அதிகாரிகள் பிழையானவற்றுக்கு பழகிவிட்டார்கள். அவர்களை அதிலிருந்து மாற்றுவதற்கு பாடுபடவேண்டியிருக்கின்றது. 

எங்கள் வடக்கு மாகாணமும் அதிலிருந்து விதிவிலக்கானது அல்ல. நேர்மையானவர்கள் பழிவாங்கப்படுகின்றார்கள் அல்லது பந்தாடப்படுகின்றார்கள். 

அதைப்போலத்தான் வசதி படைத்த செல்வாக்கானவர்கள் அரச திணைக்களங்களுக்கு வந்தால் அவர்களுக்கு மரியாதையுடன் விரைந்து சேவை வழங்கும் அதிகாரிகள், ஏழை எளிய மக்கள் வந்தால் அலைக்கழிக்கின்றனர். இந்த நிலைமை மாறவேண்டும்.

புதிய அரசாங்கம் மக்கள் நேய சேவையைக் கொண்டு செல்லவே விரும்புகின்றது. 

எனவே அரச அதிகாரிகள் அதற்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.



கறைபடியாத கரங்களுடன் அரச பணியாளர்கள் மக்களுக்கு சேவை வழங்க தயாராக வேண்டும்; வடக்கு ஆளுநர் வலியுறுத்து. கறைபடியாத கரங்களுடன் அரசாங்கப் பணியாளர்கள் மக்களுக்கு சேவை வழங்கும் வகையில் எதிர்காலத்தில் தங்களை மாற்றிக்கொள்வதற்குத் தயாராக வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற உலக மண் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.நாங்கள் கல்வி கற்கின்ற காலத்தில் இவ்வாறு பல தினங்கள் கடைப்பிடிக்கப்படவில்லை. இப்போது ஐ.நாவால் பல தினங்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன. அவ்வாறு ஒரு தினத்தை அறிமுகப்படுத்துவதென்றால் அதன் முக்கியத்தும் அல்லது பயன்பாடு இப்போது தேவைப்படுகின்றது என்பது அர்த்தம்.இந்த மண்ணை இயற்கை சீரழிக்கவில்லை. மனிதன்தான் சீரழித்துக்கொண்டிருக்கின்றான். சகல வளமும் கொண்டது எங்கள் நாடு. அதைப்போல எமது மாகாணமும் சகல வளங்களையும் காலநிலையையும் கொண்டிருக்கின்றது.அப்படியான எமது மாகாணத்தில் விவசாயிகள் தங்களை இன்னமும் ஏழை விவசாயிகள் என்று விளித்து கூறிக்கொண்டிருக்கின்றனர். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவேண்டும்.அவர்களுக்கு நவீன முறைமையிலான விவசாயத்தை அறிமுகப்படுத்தவேண்டும். அவர்களின் உற்பத்தியையும், அதன் தரத்தையும் ஊக்குவிக்கவேண்டும். அபிவிருத்திகளை முன்னெடுக்கும்போது கண்மூடித்தனமாக எதிர்க்கின்றார்கள்.அபிவிருத்திகளை முன்னெடுக்கும்போது ஆகக்குறைந்த சூழல் பாதிப்பு இருக்கும். அதை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவுக்கு குறைத்து நாம் செய்யவேண்டும். அதைவிடுத்து எல்லாவற்றையும் எதிர்க்கும் மனநிலையில் நோக்கிக் கொண்டிருந்தால் நாம் முன்னேற முடியாது. அதிகாரிகளுடன் போராடவேண்டியிருப்பதாக அமைச்சர்களே கூறியிருக்கின்றனர். அது உண்மைதான். பல அதிகாரிகள் பிழையானவற்றுக்கு பழகிவிட்டார்கள். அவர்களை அதிலிருந்து மாற்றுவதற்கு பாடுபடவேண்டியிருக்கின்றது. எங்கள் வடக்கு மாகாணமும் அதிலிருந்து விதிவிலக்கானது அல்ல. நேர்மையானவர்கள் பழிவாங்கப்படுகின்றார்கள் அல்லது பந்தாடப்படுகின்றார்கள். அதைப்போலத்தான் வசதி படைத்த செல்வாக்கானவர்கள் அரச திணைக்களங்களுக்கு வந்தால் அவர்களுக்கு மரியாதையுடன் விரைந்து சேவை வழங்கும் அதிகாரிகள், ஏழை எளிய மக்கள் வந்தால் அலைக்கழிக்கின்றனர். இந்த நிலைமை மாறவேண்டும்.புதிய அரசாங்கம் மக்கள் நேய சேவையைக் கொண்டு செல்லவே விரும்புகின்றது. எனவே அரச அதிகாரிகள் அதற்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement