• Oct 18 2026

திரையரங்கிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த மர்மப் பொருட்கள்! சோதனையில் சிக்கிய நபர்!

Chithra / Oct 18th 2026, 10:28 am
image


கம்பஹா மாவட்டத்தில் உள்ள திரையரங்கு ஒன்றில் பொலிஸார் நடத்திய திடீர் சோதனையில் பெருமளவான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.


கிரிந்திவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹங்வெல்ல வீதியில் அமைந்துள்ள திரையரங்கில் நேற்று (17) மாலை இந்தச் சோதனை நடத்தப்பட்டுள்ளது.


கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், மில்லத்தே பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


ஆனால், திரையரங்கிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த பொருட்கள்தான் பொலிஸாரின் முக்கிய கண்டுபிடிப்பாக அமைந்துள்ளன.


அங்கிருந்து 5 துப்பாக்கிகள், பல்வேறு ரகங்களைச் சேர்ந்த 3,759 தோட்டாக்கள் மற்றும் 2 கைக் குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.


கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகளில் 2 பிஸ்டல்கள், ஒரு ரிவால்வர், ஒரு ரிப்பீட்டர் துப்பாக்கி மற்றும் ஒரு போர் 12 துப்பாக்கி என்பன அடங்குகின்றன.


இந்த ஆயுதங்கள் திரையரங்கில் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை தொடர்பில் கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

திரையரங்கிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த மர்மப் பொருட்கள் சோதனையில் சிக்கிய நபர் கம்பஹா மாவட்டத்தில் உள்ள திரையரங்கு ஒன்றில் பொலிஸார் நடத்திய திடீர் சோதனையில் பெருமளவான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.கிரிந்திவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹங்வெல்ல வீதியில் அமைந்துள்ள திரையரங்கில் நேற்று (17) மாலை இந்தச் சோதனை நடத்தப்பட்டுள்ளது.கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், மில்லத்தே பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஆனால், திரையரங்கிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த பொருட்கள்தான் பொலிஸாரின் முக்கிய கண்டுபிடிப்பாக அமைந்துள்ளன.அங்கிருந்து 5 துப்பாக்கிகள், பல்வேறு ரகங்களைச் சேர்ந்த 3,759 தோட்டாக்கள் மற்றும் 2 கைக் குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகளில் 2 பிஸ்டல்கள், ஒரு ரிவால்வர், ஒரு ரிப்பீட்டர் துப்பாக்கி மற்றும் ஒரு போர் 12 துப்பாக்கி என்பன அடங்குகின்றன.இந்த ஆயுதங்கள் திரையரங்கில் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை தொடர்பில் கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement