• Sep 20 2024

மாடிவீட்டுத் தொகுதியில் கேட்கும் மர்ம சத்தம் - குழப்பத்தில் மக்கள்!

Tamil nila / Jan 31st 2023, 7:48 am
image

Advertisement

சிங்கப்பூர் வீட்டுத் தொகையில் யாரோ சிலர் மந்திரம் பாடும் சத்தத்தையும் எதையோ தட்டும் சத்தத்தையும் நாள்தோறும் கேட்டுக்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.


ஆண்டு தொடங்கியதிலிருந்து புளோக் 201C காம்பஸ்வேல் டிரைவில் (Compassvale Drive) வசிக்கும் சிலரே இவ்வாறு செய்து வருகின்றனர்.


அத்தகைய சத்தங்கள் தங்களுக்குத் தொந்தரவு அளிப்பதாக அவர்களில் சிலர் தெரிவித்தனர். 


ஆனால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்குச் சென்ற போது அந்தச் சத்தங்கள் தோன்றவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.


“இரவு பகல் எனச் சத்தம் எந்நேரமும் கேட்கிறது. அது மிகவும் தொல்லையாக உள்ளது” என பாதிக்கப்பட்ட குடியிருப்பின் 11ஆவது மாடியில் வாழும் 67 வயதான ஒருவர் தெரிவித்துள்ளனார்.


அத்தகைய சத்தங்கள் தொடங்கிய போது, அது சில நாள் மட்டுமே வரும் என்று எண்ணியதாக அவர் கூறினார். ஆனால் தற்போது 2 வாரங்கள் கடந்துவிட்டன.


மந்திரம் பாடுவது முன்பதிவு செய்யப்பட்டதுஎன்று அவர் நம்புகிறார். ஒருவரால் எந்நேரமும் அப்படிச் சிறப்பாகப் பாடமுடியாது என்பதை அவர் சுட்டினார்.


அந்தச் சத்தத்தால் நிம்மதியாகத் தூங்கமுடியவில்லை என்று 5ஆம் மாடியில் வசிக்கும் 50 வயது பெண் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.


அந்த புளோக்கின் கீழ்த்தளத்தில் மின்தூக்கிக்கு அருகில் கடிதம் ஒன்று ஒட்டப்பட்டிருந்ததுடன், அது கைப்பட எழுதப்பட்டது என்றும், அதில் பக்கத்துவீட்டுக்காரர்களைப் பற்றியும் யோசியுங்கள். உங்களது சத்தத்தின் அளவைக் குறைத்துவிடுங்கள், அல்லது ஜன்னலை மூடுங்கள்” எனவும் எழுதப்பட்டிருந்தது.

மாடிவீட்டுத் தொகுதியில் கேட்கும் மர்ம சத்தம் - குழப்பத்தில் மக்கள் சிங்கப்பூர் வீட்டுத் தொகையில் யாரோ சிலர் மந்திரம் பாடும் சத்தத்தையும் எதையோ தட்டும் சத்தத்தையும் நாள்தோறும் கேட்டுக்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.ஆண்டு தொடங்கியதிலிருந்து புளோக் 201C காம்பஸ்வேல் டிரைவில் (Compassvale Drive) வசிக்கும் சிலரே இவ்வாறு செய்து வருகின்றனர்.அத்தகைய சத்தங்கள் தங்களுக்குத் தொந்தரவு அளிப்பதாக அவர்களில் சிலர் தெரிவித்தனர். ஆனால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்குச் சென்ற போது அந்தச் சத்தங்கள் தோன்றவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.“இரவு பகல் எனச் சத்தம் எந்நேரமும் கேட்கிறது. அது மிகவும் தொல்லையாக உள்ளது” என பாதிக்கப்பட்ட குடியிருப்பின் 11ஆவது மாடியில் வாழும் 67 வயதான ஒருவர் தெரிவித்துள்ளனார்.அத்தகைய சத்தங்கள் தொடங்கிய போது, அது சில நாள் மட்டுமே வரும் என்று எண்ணியதாக அவர் கூறினார். ஆனால் தற்போது 2 வாரங்கள் கடந்துவிட்டன.மந்திரம் பாடுவது முன்பதிவு செய்யப்பட்டதுஎன்று அவர் நம்புகிறார். ஒருவரால் எந்நேரமும் அப்படிச் சிறப்பாகப் பாடமுடியாது என்பதை அவர் சுட்டினார்.அந்தச் சத்தத்தால் நிம்மதியாகத் தூங்கமுடியவில்லை என்று 5ஆம் மாடியில் வசிக்கும் 50 வயது பெண் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.அந்த புளோக்கின் கீழ்த்தளத்தில் மின்தூக்கிக்கு அருகில் கடிதம் ஒன்று ஒட்டப்பட்டிருந்ததுடன், அது கைப்பட எழுதப்பட்டது என்றும், அதில் பக்கத்துவீட்டுக்காரர்களைப் பற்றியும் யோசியுங்கள். உங்களது சத்தத்தின் அளவைக் குறைத்துவிடுங்கள், அல்லது ஜன்னலை மூடுங்கள்” எனவும் எழுதப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

Advertisement