யாழ்ப்பாணம் வடமராட்சி வல்வெட்டித்துறை பொலிஸ் உத்தியோகத்தரின் வீடு உள்ளிட்ட சில இடங்களில் இடம்பெற்ற களவுச் சம்பவத்துடன் தொடர்புடைய 7 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன் 16 பவுண் நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 4 பேர், மன்னாரைச் சேர்ந்த 2 பேர், முல்லைத்தீவைச் சேர்ந்த ஒருவர் என 7 பேர் காங்கேசன்துறை குற்றத் தடுப்பு புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு வல்வெட்டித்துறை பொலிஸா ரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 20 ஆம் திகதி வல்வெட்டித்துறையில் நடந்த களவுச் சம்பவத்தில் ஐந்தரை இலட்சம் ரூபாய் பணமும் 16 பவுண் நகைகளும் களவுபோன சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
விசாரணைகளுக்கு பின்னர் சந்தேக நபர்களை பருத்தித்துறை நீதிவான் நீதி மன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் இருவர் பிணையில் விடுவிக்கப் பட்ட தோடு ஐந்து சந்தேக நபர்களையும் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யாழின் முக்கிய பகுதிகளில் நுழைந்த மர்ம நபர்கள். மாயமான நகைகள்.samugammedia யாழ்ப்பாணம் வடமராட்சி வல்வெட்டித்துறை பொலிஸ் உத்தியோகத்தரின் வீடு உள்ளிட்ட சில இடங்களில் இடம்பெற்ற களவுச் சம்பவத்துடன் தொடர்புடைய 7 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன் 16 பவுண் நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 4 பேர், மன்னாரைச் சேர்ந்த 2 பேர், முல்லைத்தீவைச் சேர்ந்த ஒருவர் என 7 பேர் காங்கேசன்துறை குற்றத் தடுப்பு புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு வல்வெட்டித்துறை பொலிஸா ரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.கடந்த 20 ஆம் திகதி வல்வெட்டித்துறையில் நடந்த களவுச் சம்பவத்தில் ஐந்தரை இலட்சம் ரூபாய் பணமும் 16 பவுண் நகைகளும் களவுபோன சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.இந்நிலையில் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.விசாரணைகளுக்கு பின்னர் சந்தேக நபர்களை பருத்தித்துறை நீதிவான் நீதி மன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்நிலையில் இருவர் பிணையில் விடுவிக்கப் பட்ட தோடு ஐந்து சந்தேக நபர்களையும் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.