• May 04 2024

மீண்டும் ஆரம்பமாகவுள்ள நாகபட்டினம் - காங்கேசன்துறைக்கு இடையிலான கப்பற் போக்குவரத்து சேவை..!samugammedia

Tharun / Jan 28th 2024, 6:12 pm
image

Advertisement

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15 முதல் நாகபட்டினம் - காங்கேசன்துறைக்கு இடையிலான பயணிகள் கப்பற் போக்குவரத்து சேவை இடம்பெற உள்ளதாக துறைமுக கப்பல் விமானத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 

கடந்த ஆண்டு இந்த சேவையானது பல காரணங்ககளால் இடை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அத்தோடு 2024ம் ஆண்டில் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு பயணிகள்  கப்பல் சேவையில் ஈடுபட்டிருந்த "செரியாபாணி " எனும் கப்பல் சேவையில் ஈடுபடுத்தப்படாது என தெரிவிக்கப்பட்டிருந்தது. கப்பலை தொடர்ந்து இயக்குவதற்குரிய போதிய வருமானம் போதாத நிலையிலும், மக்கள் கப்பல் பிராயணதிற்காக பதிவு செய்யும் நடவடிக்கை வெகுவாக குறைந்துள்ள காரணத்தாலும் "செரியாபாணி " எனும் கப்பல் சேவையில் ஈடுபடுத்தப்படாது என கூறப்பட்டிருந்தது. அந்த கப்பல் வேறு தேவைக்காக இந்திய அரசினால் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்கு மாறாக புதிய கப்பலான "சிவகங்கை" எனும் கப்பல் சேவையில் ஈடுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

அதன்படி பெப்ரவரி மாதம் 1ம் திகதி ஆரம்பிக்கப்பட இருந்த கப்பல்  சேவையானது,  எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15 முதல் நாகபட்டினம் - காங்கேசன்துறைக்கு இடையிலான பயணிகள் கப்பற் போக்குவரத்து சேவை இடம்பெற உள்ளதாக துறைமுக கப்பல் விமானத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது. 

மீண்டும் ஆரம்பமாகவுள்ள நாகபட்டினம் - காங்கேசன்துறைக்கு இடையிலான கப்பற் போக்குவரத்து சேவை.samugammedia எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15 முதல் நாகபட்டினம் - காங்கேசன்துறைக்கு இடையிலான பயணிகள் கப்பற் போக்குவரத்து சேவை இடம்பெற உள்ளதாக துறைமுக கப்பல் விமானத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு இந்த சேவையானது பல காரணங்ககளால் இடை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அத்தோடு 2024ம் ஆண்டில் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு பயணிகள்  கப்பல் சேவையில் ஈடுபட்டிருந்த "செரியாபாணி " எனும் கப்பல் சேவையில் ஈடுபடுத்தப்படாது என தெரிவிக்கப்பட்டிருந்தது. கப்பலை தொடர்ந்து இயக்குவதற்குரிய போதிய வருமானம் போதாத நிலையிலும், மக்கள் கப்பல் பிராயணதிற்காக பதிவு செய்யும் நடவடிக்கை வெகுவாக குறைந்துள்ள காரணத்தாலும் "செரியாபாணி " எனும் கப்பல் சேவையில் ஈடுபடுத்தப்படாது என கூறப்பட்டிருந்தது. அந்த கப்பல் வேறு தேவைக்காக இந்திய அரசினால் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.அதற்கு மாறாக புதிய கப்பலான "சிவகங்கை" எனும் கப்பல் சேவையில் ஈடுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி பெப்ரவரி மாதம் 1ம் திகதி ஆரம்பிக்கப்பட இருந்த கப்பல்  சேவையானது,  எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15 முதல் நாகபட்டினம் - காங்கேசன்துறைக்கு இடையிலான பயணிகள் கப்பற் போக்குவரத்து சேவை இடம்பெற உள்ளதாக துறைமுக கப்பல் விமானத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement