வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா இன்று(09) காலை பத்து மணிக்கு வேதபாராயணங்கள் ஒலிக்க கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
கொடியேற்ற நிகழ்வை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நல்லூருக்கு வருகை தந்தனர்.
இந்நிலையில், இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமான மகோற்சவ பெருவிழா தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ளது.
அந்தவகையில் எதிர்வரும் 18ஆம் திகதி மஞ்சமும், 31ஆம் திகதி சப்பை ரத திருவிழாவும் , செப்டம்பர் மாதம் 1ஆம் திகதி தேர்த் திருவிழாவும், 2ஆம் திகதி காலை தீர்த்த திருவிழாவும் மாலை கொடியிறக்கமும் நடைபெறும்.
அத்தோடு செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி பூங்காவனமும் செப்டம்பர் 4ஆம் திகதி வைரவர் உற்சவத்துடனும் 2024 ஆம் ஆண்டுக்கான மஹோற்சவம் நிறைவுபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம். வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா இன்று(09) காலை பத்து மணிக்கு வேதபாராயணங்கள் ஒலிக்க கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.கொடியேற்ற நிகழ்வை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நல்லூருக்கு வருகை தந்தனர்.இந்நிலையில், இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமான மகோற்சவ பெருவிழா தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ளது.அந்தவகையில் எதிர்வரும் 18ஆம் திகதி மஞ்சமும், 31ஆம் திகதி சப்பை ரத திருவிழாவும் , செப்டம்பர் மாதம் 1ஆம் திகதி தேர்த் திருவிழாவும், 2ஆம் திகதி காலை தீர்த்த திருவிழாவும் மாலை கொடியிறக்கமும் நடைபெறும்.அத்தோடு செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி பூங்காவனமும் செப்டம்பர் 4ஆம் திகதி வைரவர் உற்சவத்துடனும் 2024 ஆம் ஆண்டுக்கான மஹோற்சவம் நிறைவுபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.