• Dec 17 2024

சட்டத்தேர்வில் தமக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை; நாமல் மறுப்பு..!

Sharmi / Dec 17th 2024, 9:05 am
image

11 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற  சட்டத் தேர்வின் போது தமக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளமையை சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மறுத்துள்ளார்.

நாமல் ராஜபக்சவுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதாகக் கூறி, சிவில் சமூகப் பிரதிநிதி ஒருவர் குற்றப் புலனாய்வுத்துறையில் தாக்கல் செய்த முறைப்பாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக நாமல் இந்த மறுப்பை வெளியிட்டுள்ளார்.

மோசடி, ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான குடிமக்கள் இயக்கத்தின் தலைவர் ஜமுனி கமந்த துசார இந்த முறைப்பாட்டை செய்திருந்தார்.

முறைப்பாட்டின் பின்னர், ஊடகங்களுக்கு மத்தியில் உரையாற்றிய கமந்த துசார, நாமல் ராஜபக்ச மோசடியாக தனது சட்டப் பட்டம் பெற்றதற்கான ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்தார்.

எனினும் தமக்கு எதிரான பல குற்றச்சாட்டுகளைப் போலவே, பல ஆண்டுகளாக அரசியல் ஆதாயங்களுக்காக மட்டுமே இத்தகைய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருவதாக நாமல் குறிப்பிட்டுள்ளார்.

இது, இலங்கை சட்டக் கல்லூரியின் நம்பகத் தன்மையை கடுமையாகக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றது என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

சட்டத்தேர்வில் தமக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை; நாமல் மறுப்பு. 11 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற  சட்டத் தேர்வின் போது தமக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளமையை சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மறுத்துள்ளார்.நாமல் ராஜபக்சவுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதாகக் கூறி, சிவில் சமூகப் பிரதிநிதி ஒருவர் குற்றப் புலனாய்வுத்துறையில் தாக்கல் செய்த முறைப்பாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக நாமல் இந்த மறுப்பை வெளியிட்டுள்ளார்.மோசடி, ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான குடிமக்கள் இயக்கத்தின் தலைவர் ஜமுனி கமந்த துசார இந்த முறைப்பாட்டை செய்திருந்தார்.முறைப்பாட்டின் பின்னர், ஊடகங்களுக்கு மத்தியில் உரையாற்றிய கமந்த துசார, நாமல் ராஜபக்ச மோசடியாக தனது சட்டப் பட்டம் பெற்றதற்கான ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்தார்.எனினும் தமக்கு எதிரான பல குற்றச்சாட்டுகளைப் போலவே, பல ஆண்டுகளாக அரசியல் ஆதாயங்களுக்காக மட்டுமே இத்தகைய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருவதாக நாமல் குறிப்பிட்டுள்ளார்.இது, இலங்கை சட்டக் கல்லூரியின் நம்பகத் தன்மையை கடுமையாகக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றது என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement