• Sep 22 2024

மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல்! – வெளியானது அறிவிப்பு

Chithra / Aug 7th 2024, 9:09 am
image

Advertisement

 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவு செய்யப்பட்டுள்ளதாக இன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி  அவர் சார்பில் கட்டுப்பணம் இன்று செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று காலை கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் இந்த அறிவிப்பு உத்தியோகபூர்வமாக வெளியாகியுள்ளது.

இதேவேளை தனிப்பட்ட காரணங்களால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா நேற்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ, கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கபப்பட்டுள்ளார்.

மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் – வெளியானது அறிவிப்பு  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவு செய்யப்பட்டுள்ளதாக இன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி  அவர் சார்பில் கட்டுப்பணம் இன்று செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இன்று காலை கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் இந்த அறிவிப்பு உத்தியோகபூர்வமாக வெளியாகியுள்ளது.இதேவேளை தனிப்பட்ட காரணங்களால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா நேற்று தெரிவித்துள்ளார்.இந்நிலையில் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ, கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கபப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement